லப்பர் பந்து வெற்றி.. அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய அட்டகத்தி தினேஷ்!
சென்னை: அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகி வெற்றி வாகை சூடியத் படம் லப்பர் பந்து. தமிழரசன் பச்சமுத்து இயக்கிய இந்த படத்தில், சஞ்சனா, சுவாசிகா, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்த இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தினேஷ் சம்பளத்தை அதிரடியாக உயர்த்திவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் தினேஷ் நல்ல கதாபாத்திரம் உடைய ரோலில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் இளைஞர்களுக்கு பிடித்தமான திரைப்படமாக இருந்ததால், அந்த படம் நல்ல வசூலை அள்ளியது. அந்த படத்தை தொடர்ந்து, தனது பெயரை அடைமொழியோடு சேர்த்து , அட்டகத்தி' தினேஷ் என்று அழைக்கப்பட்டார். இந்த படத்தை அடுத்து, 2014 ஆம் ஆண்டு ராஜு முருகன் இயக்கத்தில் நடித்த 'குக்கூ' படத்தில் கண் தெரியாதவர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்ததில் இருந்தே கண் பிரச்சனை இருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

லப்பர் பந்து: அண்மையில் அட்டக்கத்தி தினேஷ் நடித்த லப்பர் பந்து திரைப்படம் தியேட்டரில் வெளியாகி சக்கை போடு போட்டது. இப்படத்தில் ஓவியரான அட்டக்கத்தி தினேஷ் உள்ளூரில் நடைபெறும் ரப்பர் பந்து கிரிக்கெட் போட்டிகளில் அதிரடி ஆட்டக்காரராக இருக்கிறார். எங்கு கிரிக்கெட் போட்டி நடந்தாலும் கெத்து முதல் ஆளாக ஆஜராகி கெத்து காட்டுவது அவரின் பாணி. தீவிர விஜயகாந்தின் ரசிகரான தினேஷ், பெட்டை கையில் எடுத்து அடித்தால், அது சிக்சர் தான். தினேஷ் களமிறங்கினதும் பொட்டுவைத்த தங்கக்குடம் பாடலை போட்டு அலப்பறை செய்துவிடுவார்கள்.
சம்பளம் எவ்வளவு தெரியுமா: அட்டக்கத்தி தினேஷூம் ஹரிஷ் கல்யாணும் உள்ளூர் போட்டி ஒன்றில் விளையாடும் போது, யார் வெத்து என்பதில் இருவருக்குள்ளும் சண்டை வர, அந்த சண்டையால் நாளுக்கு நாள் ஈகோ வளர்கிறது. இதற்கிடையே தினேஷின் மகள் சஞ்சனா ஹரிஷ் கல்யாணிக்கும் காதல் மலர்கிறது. கிரிக்கெட் ஈகோவால் வளர்ந்த பகைக்கும், காதலுக்கும் பகையாக மாறுகிறது. 'அட்டக்கத்தி' தினேஷ் 20வயது மகளுக்கு அப்பாவாக நடித்திருக்கிறார். ஆராவாரமே இல்லாமல் வெளியானத் திரைப்படத்திற்கு மக்களிடம் இருந்த நல்ல விமர்சனம் வந்ததை அடுத்து படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடினார்கள்.
குறிப்பாக அட்டக்கத்தி தினேஷின் நடிப்பு உச்சுகொட்ட வைத்துவிட்டது எனலாம் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரூ. 8 கோடியாக சம்பளத்தை உயர்த்தி உள்ளார். அட்டக்கத்தி தினேசை புக் செய்ய வந்த தயாரிப்பாளர்கள், அவர் அதிரடியாக உயர்த்தி இருக்கும் சம்பளத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











