keerthy suresh net worth: அடேங்கப்பா.. கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் திரைப்படம் பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது.

do you know Mahanati actress keerthy suresh has an estimated net worth

அழகும், திறமையும் ஒரு சேர இருந்த கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் படத்துக்கு பிறகு பட வாய்ப்புகள் குவிந்தன.

நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் செட் ஆக மாட்டார் என்று பேசியவர்களின் வாயை அபாரமான நடிப்பின் மூலம் அடைத்தார். அந்தப் படத்தில் சாவித்திரியாகவே வாழ்ந்து இருந்தார் கீர்த்தி சுரேஷ். படம் மெகா ஹிட்டாகி கீர்த்திக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது மட்டுமில்லாமல் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: இதையடுத்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த கீர்த்தி சுரேஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்தார். அண்மையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் படத்தில் நடித்திருக்கிறார். படம் ஜூன் மாதம் வெளியாகி சக்கைப்போடு போட்டது. அதேபோல் ரகுதாத்தா என்ற படத்திலும், வருண் தவானுடன் இந்திப் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இன்று பிறந்தநாள்: இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், அவரின் சொத்து மற்றும் படத்திற்கு அவர் வாங்கும் சம்பளம் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

சொத்து மதிப்பு: ஒரு படத்திற்கு ரூ.4 கோடி சம்பளம் வாங்கும் கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு ரூ.60 கோடியில் இருந்து ரூ.70 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ், உஷா இன்டர்நேஷனல், ஜோஸ் ஆலுக்காஸ், உஷா இன்டர்நேஷனல் லிமிடெட் மற்றும் பல பிரபலமான பிராண்டுகளுக்கு அவர் பிராண்ட் தூதராக உள்ளார். இதன் மூலமும் இவருக்கு கணிசமான வருமானம் வந்து கொண்டு இருக்கிறது.

do you know Mahanati actress keerthy suresh has an estimated net worth

பல சொகுசு கார்கள்: இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 16 மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கும் இவருக்கு இதன் மூலமாக ரூ.25 லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது. இவருக்கு சென்னையில் ஒரு பிரம்மாண்டமான வீடும், ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸ்-ல் ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பும் உள்ளது. 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள Volvo S90, INR 1.38 கோடி மதிப்புள்ள BMW 7 Series 730Ld, INR 81 லட்சம் விலையில் Mercedes Benz AMG GLC43, டொயோட்டா இன்னோவா என சொகுசு கார்களை வைத்து இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X