திருமணம் முடிந்தது...நயன்தாரா–விக்னேஷ் சிவன் ஹனிமூனுக்கு எங்க போறாங்க தெரியுமா?
சென்னை : திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்து விட்டது. அடுத்ததாக ஹனிமூனுக்கு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா எங்கே போக போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Recommended Video
அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்த நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு கோயில்களைச் சேர்ந்த 20 புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியம் முழங்க காலை 8.10 மணிக்கு நயன்தாரா கழுத்தில் தாலி கட்டினார் விக்னேஷ் சிவன்.
ரஜினி, ஷாருக்கான், விஜய், கார்த்தி, சரத்குமார், அட்லி, மணிரத்னம், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை வாழ்த்தினர். ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் சோஷியல் மீடியாவில் வாழ்த்து கூறி வருகின்றனர்.

நயன்தாரா கல்யாண புடவை
பலத்த பாதுகாப்புடன் நடந்த இவர்களின் திருமண போட்டோக்கள் வெளியாகி செம டிரெண்டாகி வருகின்றன. மணமகன் விக்னேஷ் சிவன், பளபளக்கும் பட்டுவேட்டி சட்டையில் ஜொலிக்கிறார். நயன்தாரா எந்த மாதிரியான பட்டுப்புடவை அணிவார் என அனைவரும் ஆவலாக பார்த்துக் கொண்டிருக்கையில், முழுவதும் சிவப்பு நிறத்தில் ரோஜா இதழ் போன்ற டிசைனில் அமைந்த புடவையில் தேவதை போல் வந்துள்ள நயன்தாராவின் போட்டோக்களை பார்த்து அனைவரும் வாயை பிளந்து வருகின்றனர்.

ஹனிமூன் எங்க போக போறாங்க
திருமணம் முடிந்த கையோடு அடுத்து ஹனுமூனுக்கு எந்த நாட்டிற்கு போக போகிறார்கள் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சாதாரணமாக பிறந்தநாள் கொண்டாட்டம், விடுமுறை, புத்தாண்டு கொண்டாட்டம் என்றாலே வெளிநாட்டிற்கு சென்று கொண்டாடி வந்தவர்கள், ஹனிமூனை எப்படி கொண்டாடுவார்கள் என அனைவரும் கேட்டு வருகின்றனர்.

இதுதான் ஹனிமூன் பிளானா
ஆனால் லேட்டஸ்ட் தகவலின், நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஹனிமூன் எதுவும் செல்லவில்லையாம். இருவரும் அடுத்தடுத்து பல பட வாய்ப்புக்களை கையில் வைத்துள்ளதால் ஹனிமூன் போக நேரமில்லையாம். அதனால் விக்னேஷ் சிவன் ஏற்கனவே செய்தியாளர் சந்திப்பில் சொன்னபடி, ஜுன் 11 ம் தேதி இருவரும் ஜோடியாக செய்தியாளர்களை சந்திக்க போகிறார்கள். அதன் பிறகு புதிய படங்களின் வேலைகளில் கவனம் செலுத்த போகிறார்களாம்.

வரிசையாக காத்திருக்கும் படங்கள்
விக்னேஷ் சிவன் அடுத்தபடியாக அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தை இயக்க போகிறார். நயன்தாரா இந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான், மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் கோல்ட் படத்தை தொடர்ந்து பாட்டு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விக்னேஷ் சிவன் இயக்க உள்ள ஏகே 62 படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. வரிசையாக படங்கள் காத்திருப்பதால், இப்போதைக்கு ஹனிமூன் செல்லும் ஐடியா ஏதும் இல்லையாம்.


Click it and Unblock the Notifications