கல்யாணத்தை நடத்தி வைத்தவர்களுக்கு இவ்வளவு சம்பளமா...அசர வைத்த நயன் – விக்கி ஜோடி

சென்னை : நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் எவ்வளவு பிரம்மாண்டமாக நடைபெற்றது என அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது வரை இவர்களின் திருமணம் தொடர்பான பல தகவல்கள் வெளியாகி ஆச்சரியப்பட வைத்து வருகின்றன.

நானும் ரெளடி தான் படத்தில் பணியாற்றிய போது காதலிக்க துவங்கிய நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி, கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களின் திருமணம் எப்போதும் நடக்கும் என அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்து வந்தனர்.

ஜுன் 9 ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் நடைபெற்றது. இதில் விஐபி.,க்கள், குடும்ப உறுப்பினர்கள் என 200 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். பலத்த பாதுகாப்புடன். பல கட்டுப்பாடுகளுடன் இவர்களின் திருமணம் நடத்தப்பட்டது.

திருமண செலவு 20 கோடி

திருமண செலவு 20 கோடி

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் நயன்தாரா அணிந்திருந்த புடவை, நகைகள், திருமணத்தில் இடம்பெற்ற விருந்து என அனைத்தும் ஆச்சரியத்தும் பேசு பொருளாக மாறின. இவர்களின் திருமணத்திற்கு 20 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இவர்களின் திருமணத்தை ஒளிபரப்பு செய்யும் உரிமத்தை பெற்றிருந்த நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தான் திருமணத்திற்கான மொத்த செலவையும் செய்ததாக கூறப்பட்டது.

உரிமத்தை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்

உரிமத்தை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்

நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 25 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளது. இதனால் திருமணத்திற்கான செலவான 20 கோடி ரூபாயை கொடுத்ததுடன், நயன் - விக்கியிடம் ரூ.5 கோடியை கையில் கொடுத்துள்ளது. திருமணத்தில் கூட செம பிசினஸ் பேசி நல்ல லாபம் பார்த்துள்ளார்கள் என பரபரப்பாக பேசப்பட்டது.

நயன்தாரா புடவையில் இவ்வளவு இருக்கா

நயன்தாரா புடவையில் இவ்வளவு இருக்கா

திருமண செலவில் நயன்தாராவின் புடவை, அவர் அணிந்து வந்த நகைகள் சேர்க்கப்படவில்லை என கூறப்படுகிறது. நயன்தாரா அணிந்து வந்த நகைகள் அனைத்து விக்னேஷ் சிவன் பரிசாக வழங்கியது, இதன் மதிப்பு பல கோடி என கூறப்பட்டது. இது தவிர நயன்தாரா அணிந்திருந்த புடவை அவருக்காக பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்டது. முழுக்க முழுக்க கை வேலைப்பாடுகளாக உருவாக்கப்பட்ட இந்த புடவையில் பல இடங்களில் ஆர்டின் வடிவத்துடன் கூடிய நயன்தாரா - விக்னேஷ் சிவனின் பெயர் இந்தியில் பிரிண்ட் செய்யப்பட்டிருந்ததாம்.

ஒரு போட்டோ கூட வரலியேப்பா

ஒரு போட்டோ கூட வரலியேப்பா

மொத்த ஒளிபரப்பு உரிமத்தையும் நெட்ஃபிளிக்ஸ் வாங்கி உள்ளதால் நயன்தாராவில் திருமண தொடர்பான போட்டோ, வீடியோ என இதுவரை எதுவும் வெளியாகவில்லை. விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஒரு சில போட்டோக்கள் மட்டும் தான் மீடியாக்கள், ரசிகர்கள் என பலரும் பகிர்ந்து வாழ்த்து கூறி வந்தனர். திருமணத்திற்கு பிறகு பொது இடங்களில் இந்த ஜோடி வலம் வரும் போட்டோக்கள் மட்டுமே அவ்வப்போது வெளியாகி டிரெண்டிங் ஆகி வருகிறது.

புரோகிதர்களுக்கு இவ்வளவு சம்பளமா

புரோகிதர்களுக்கு இவ்வளவு சம்பளமா

இவர்களின் திருமணத்தில் மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், மொத்தம் தமிழகத்தில் பிரபலமான கோயில்களைச் சேர்ந்த 24 புரோகிதர்கள் நடத்தி வைத்தனர்.இத்தனை பேர் கலந்து கொண்டாலும் திருமண சடங்குகளை நடத்தி வைத்தவர்கள் 5 பேர் தானாம். இவர்களுக்கு சம்பளமாக தலா 5 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டதாம். மொத்தமாக புரோகிதர்களுக்கு மட்டும் 25 லட்ச ரூபாயை சம்பளமாக வழங்கி உள்ளனர். சிறிது நேரம் திருமணத்தை நடத்தி வைத்தததற்கு இவ்வளவு சம்பளமா என அனைவரும் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர்.

இதுக்கு தான் இத்தனை பேரா

இதுக்கு தான் இத்தனை பேரா

நயன்தாராவிற்கு மாங்கல்ய தோஷம், செவ்வாய் தோஷம் இருப்பதால் தான் பரிகாரம் செய்வதற்காக தான் திருமணத்திற்கு முன்பும் சரி, திருமணம் முடிந்த பிறகும் சரி நயன் - விக்கி ஜோடி திருப்பதி, கேரளா கோயில் என பல கோயில்களுக்கும் ஜோடியாக சென்று வழிபாடு நடத்தி வருகிறார்கள் என தகவல் வெளியானது. திருமணத்தன்றும் பரிகார பூஜைகள் முடித்த பிறகே விக்கி நயனுக்கு தாலி கட்டினாராம்.

தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாடும் நயன்

தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாடும் நயன்

கோயில்களுக்கு சென்று பூஜைகளை முடித்த பிறகே கொச்சியில் உள்ள நயன்தாராவின் வீட்டில் இந்த ஜோடி பொழுதை கழித்துள்ளது. தற்போது ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றுள்ளனர். அங்கு தாங்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட ரொமான்டிக் போட்டோக்கக்களை விக்னேஷ் சிவன் தினமும் வெளியிட்டு வருகிறார். கழுத்தில் தாலியுடன் மாடர்ன் டிரெசில் வலம் வரும் நயன்தாராவின் போட்டோக்கள் செம வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X