Jayam Ravi Net worth: கோடியில் புரளும் ஜெயம் ரவி.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சென்னை: நடிகர் ஜெயம் ரவி இன்று தனது 43வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சினிமா குடும்பத்தைச் சேர்ந்த ஜெயம் ரவியின் தந்தை திரைப்பட எடிட்டர் ஆவார். இவர் தொட்டில் சபதம் என்ற படத்தை தயாரித்தும் உள்ளார். இந்த படத்தில் தான் ஜெயம் ரவி முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இதையடுத்து, 2003ம் ஆண்டு தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் படத்தில் முதன் முதலில் கதாநாயகனாக நடித்தார்.
ஜெயம் ரவி: அதன் பிறகு 2004ம் ஆண்டு எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் மகன் அம்மாவிற்கு இடையே இருக்கும் பாசத்தை சொல்லும் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதையடுத்து அண்ணனின் இயக்கத்திலேயே ஜெயம் ரவி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சந்தோஷ் சுப்பிரமணியம், தனி ஒருவன் ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.
பொன்னியின் செல்வன்: ஜெயம் ரவியின் திரைப்பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படமாக அமைந்தது மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன், இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார் இத்திரைப்படம் உலகத்தையே திரும்பிபார்க்க வைத்தது.
தனிஒருவன் 2: ஜெயம் ரவி கேரியரில் மிகப் பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த தனி ஒருவன் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் ப்ரோமோ கடந்த மாதம் இறுதியில் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சொத்துமதிப்பு: இந்நிலையில் இன்று 43வது பிறந்த நாளை கொண்டாடி வரும் ஜெயம் ரவிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் அவரின் சொத்து மதிப்பு சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதில், ஜெயம் ரவியின் சொத்து மதிப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு அவரின் சொத்து மதிப்பு ரூ.73 கோடியில் இருந்து ரூ.75 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
விலை உயர்ந்த கார்: மேலும் ஜெயம் ரவி ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 2.5 முதல் 5 கோடி என்றும், விளம்பரத்தில் நடிக்க மற்றும் சோஷியல் மீடியாவின் வழியாக கணிசமான பணம் வருகிறது. இவர் தனது வருமானத்தை முதலீடு செய்துள்ளார். அவர் சொந்தமாக ஆடி கார் மற்றும் ஸ்போர்ட்ஸ் பைக் வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











