Pradeep Ranganathan Salary : டிராகன் படத்திற்காக பிரதீப் ரங்கநாதனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் தற்போது நடிகராக கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு லவ் டுடே என்ற படம் வெளியானது. அந்த திரைப்படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த பிரதீப் ரங்கநாதன். தற்போது டிராகன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்காக இவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அசோக்செல்வன் ஹீரோவாக நடித்த, ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் அவதாரம் எடுத்த அஷ்வத் மாரிமுத்து. தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் படத்தை இயக்கியிருக்கிறார். கல்லூரி கதை அம்சத்தை கொண்ட கதையை, இன்றைய இளம் தலைமுறையினரை கவரும் வகையில் அட்டகாசமான ஒரு நகைச்சுவை திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் அஸ்வந், இதில், பிரதீப் ரங்கநாதன்,அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர்,கௌதம் வாசுதேவ் மேனன்,சினேகா, மிஷ்கின், விஜே சித்து, ஹர்ஷத் கான் என பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு,லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

Dragon Pradeep Ranganathan Salary

இப்படம், தியேட்டரில் நேற்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

சம்பளம் எவ்வளவு தெரியுமா: பிரதீப் ரங்கநாதன் தனது இரண்டாவது திரைப்படத்திலேயே அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நடிகராக அவர் நடித்த லவ் டூடே படத்தை விட, இரண்டாவது படத்தில் அவரின் நடிப்பு மெருகேறி இருப்பதாக படம் பார்த்த ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலைகள் இந்த திரைப்படத்தில் நடிக்க பிரதீப் ரங்கநாதன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்திற்கு பிரதீப் ரங்கநாதன் 12 கோடி ரூபாயை சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு முன் இயக்குனராக இருந்த பிரதீப்பின் சம்பளம் குறைவாக இருந்த நிலையில் நடிகராக மாறிய பிறகு அவரது சம்பளம் அதிரடியாக உயர்ந்துள்ளது.

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்: டிராகன் படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கி வரும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்திலிருந்து தீமா தீமா என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரலானது. டிராகன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அனைவரும் பார்வையும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் படத்தின் மீது தான் உள்ளது.

t

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X