தனுஷ்தான் அடுத்த சிவாஜி, கமல் என்ற கருத்திற்கு நானே வருவேன் தயாரிப்பாளர் தானு தந்த பதில் தெரியுமா?

சென்னை: பொன்னியின் செல்வன் என்ற மிகப்பெரிய படம் வந்தாலும் விடுமுறை நாட்களை முன்னிட்டு அதனுடன் வந்த திரைப்படம்தான் நானே வருவேன்.

தயாரிப்பாளர் தானு நினைத்தது போலவே விடுமுறை நாட்கள் என்பதால் இரண்டு படங்களையும் பார்க்க மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த படம் குறித்து பல சுவாரசியமான தகவல்களை தானு ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

முதல் பாதி இரண்டாம் பாதி

முதல் பாதி இரண்டாம் பாதி

இந்தப் படம் தனுஷின் கதை என்று பலரும் கூறுகிறார்கள் அதனைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு, அது இன்று வரை எனக்கு தெரியாது. ஆனால் இந்தக் கதையை என்னிடம் கூறியது இயக்குநர் செல்வராகவன்தான். படத்தை பார்க்கும்போது முதல் பாதி செல்வராகவன் படமாகவும் இரண்டாம் பாதி தனுஷ் படமாகவும் இருக்கும். வெளிநாட்டு வசூலில் கபாலி படத்தை நானே வருவேன் முந்திவிட்டது என்று கூறுவது முற்றிலும் வதந்தி. இதுவரை எந்தப் படமும் கபாலி திரைப்படத்தின் வெளிநாட்டு வசூலை முறியடிக்கவில்லை. இனிமேல் வேண்டுமானால் ஒரு படம் அதனை செய்யக்கூடும் என்று தானு கூறியிருக்கிறார்.

வில்லன் பற்றி

வில்லன் பற்றி

முதலில் இந்தக் கதையை கூறிய போது வில்லன் கதாபாத்திரத்தில் வேறொரு நடிகரை வைத்துதான் கதை கூறினாராம் செல்வராகவன். அப்போது அந்தக் கதாபாத்திரம் கதாநாயகன் கதாபாத்திரத்தை தூக்கி சாப்பிட்டு விடுமே என்று தானு கூறினாராம். அடுத்த நாள் வந்த செல்வராகவன், அதிலும் தனுஷ் நடிக்கட்டும் என்று கூற, இதுதான் சரியான முடிவு என்று தானு பாராட்டினாராம்.

ராயன்

ராயன்

இது ஒரு புறம் இருக்க ராயன் என்கிற திரைப்படத்தையும் இந்த மூவர் கூட்டணி எடுக்கப் போவதாக செய்திகள் வலம் வருகிறது. இது குறித்து கேட்டபோது, ராயன் திரைப்படம் கிட்டத்தட்ட புதுப்பேட்டை திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் இருக்கும். இரண்டு கதைகளையுமே என்னிடம் செல்வராகவன் கூறினார். முதலில் நானே வருவேன் படத்தை எடுக்கத்தான் விருப்பப்பட்டாராம். அது மட்டுமின்றி அடுத்ததாக நானே வருவேன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமா அல்லது ராயன் படமா, எதை எடுக்க வேண்டும் என்று செல்வராகவன் மற்றும் தனுஷ்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

சிவாஜி-கமல்

சிவாஜி-கமல்

ஒவ்வொரு படத்திலும் தனுஷின் நடிப்பை பார்த்து பாராட்டுபவர்கள் இந்தப் படத்தின் மூலம் அடுத்த சிவாஜி மற்றும் கமல் நடிகர் தனுஷ்தான் என்று கூறுகின்றனர். இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு நடிகர் சிவாஜிக்கு மாற்றாக எந்த ஒரு நடிகரும் இருக்க முடியாது. இப்போதுள்ள இளைய தலைமுறை நடிகர்களில் வேண்டுமானால் சிறந்த நடிகர் தனுஷ் என்று கூறலாம். அவரும் இதையேதான் கூறுவார் என்று பல சுவாரசியமான விஷயங்களை தானு பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X