Upasana Net worth: ராம்சரண் மனைவி உபாசனாவின் சொத்து எவ்வளவு தெரியுமா? எம்மாடியோ தலையே சுத்துதே!
சென்னை: தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் தனது தந்தையைப் போலவே தெலுங்கு திரையுலகின் டாப் ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொழிலதிபர் என பல முகங்களைக் கொண்டவராக இருக்கிறார். ராம்சரணின் மனைவிதான் உபாசனா இவர் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்று இந்த செய்தியில் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் ராம் சரண். இவர் சிருந்தா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே பிரம்மாண்ட வெற்றி பெற்று, வசூலை பெற்றுத்தந்து ராம் சரணுக்கு சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. இதையடுத்து, எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவான மகதீரா படத்தில் நடித்திருந்தார். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து வெற்றிப்படங்களை கொடுத்து இன்று டாப் நடிகர்களில் ஒருவராக மாறினார் ராம்சரண்.

Game Changer: ராம் சரண் நடிப்பில் கடந்த ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் RRR என்ற படம் வெளியானது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து ராம்சரண், ஷங்கர் இயக்கத்தில் ஆர் சி 15 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'game Changer' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பெரும் பொருட்செலவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.

பெண் குழந்தை: நடிகர் ராம்சரண் அவர்கள் 2011ஆம் ஆண்டு உபாசனா காமினேனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 11 ஆண்டுகள் ஆனபோதும் அவர்கள் குழந்தை இல்லாமல் இருந்தனர். இது குறித்து இணையத்தில் பலவிதமான பேச்சுகள் எழுந்த போதும் இருவரும் ஜோடிப்புறாவாக சுற்றிவந்தனர். இதையடுத்து,கடந்த ஆண்டு உபாசனா கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான தகவலை சிரஞ்சீவி வெளியிட்டு இருந்தார். அதையடுத்து,கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20ம் தேதி இறுதியில் தான் ராம்சரண்-உபாசனா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தனது மகளுக்கு க்ளின் காரா கொனிடேலா பெயர் வைத்துள்ளனர். அண்மையில், இந்த குழந்தையின் முதல் பிறந்த நாள் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இவ்வளவு சொத்தா: இந்நிலையில், ராம் சரண் பற்றி பல விஷயங்கள் நமக்கு தெரிந்தாலும், அவரின் மனைவி பற்றி பற்றியும் அவரின் சொத்து பற்றியும் நமக்கு தெரிந்து இருக்கவாய்ப்பு இல்லை.உபாசனா காமினேனி ராம்சரண் மனைவி உபாசனா, தொழிலதிபர் பிரதாப் சி. ரெட்டியின் பேத்தி ஆவார். இவர், இண்டர்நேஷனல் பிசினஸ் மார்கெட்டிங் மற்றும் மேனேஜ்மெண்ட் படித்து பட்டம் பெற்றுள்ளார். இவரின் தந்தை அனில் காமினேனி KEI எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதேபோல் உபாசனாவின் தாயார் ஷோபனா, அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாக துணைத் தலைவராக இருக்கிறார். அப்பல்லோ மருத்துவமனையின் துணைத் தலைவராக உயர் பதவியில் உள்ள உபாசனா.'பி பாசிட்டிவ்' என்கிற இதழின் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

உபாசனாவின் தாத்தா பிரதாப் சி.ரெட்டி தலைமையிலான அப்பல்லோ மருத்துவமனையின் சந்தை மதிப்பு தோராயமாக ரூ.77,000 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. ராம்சரண் - உபாசனா ஜோடி கோடி தான் இந்தியாவின் பணக்கார ஜோடிகளில் ஒன்று என்றும், இவர்களின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 2500 கோடி இருக்கும் என்கின்றனர். இதில் ராம் சரணின் சொத்து மதிப்பு ரூ. 1,370 கோடி என்றும், உபாசனாவின் சொத்து மதிப்பு ரூ. 1,130 கோடி என்றும் சொல்லப்படுகிறது.



Click it and Unblock the Notifications











