பிஸ்னஸ், நடிப்பு என புகுந்து விளையாடும் ரெடின் கிங்ஸ்லியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சென்னை: நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு அண்மையில் திருமணம் நடந்த நிலையில் அவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த ரெடின் கிங்ஸ்லிக்கு சினிமாவின் மீது இருந்த ஆசையால், 1998 ஆம் ஆண்டு 'அவள் வருவாளா' படத்தில் ருக்கு ருக்கு என்கிற பாடலில் குரூப் டான்சராக இருந்தார்.

இதையடுத்து, பல ஆண்டுகள் படவாய்ப்பு இல்லாததால், நீண்ட இடைவெளிக்கு பின் நயன்தாரா, யோகி பாபு நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் நடித்தார்.
நீண்டகால நண்பர்: ரெடின் கிங்ஸ்லி மற்றும் நெல்சன் திலீப்குமாருக்கும் இடையே கல்லூரி படிக்கும்போதே நல்ல நட்பு இருந்தது. ஒரு ஈவெண்ட் நடத்துவதற்காக இரண்டு பேரும் சந்தித்துக்கொண்டபோது ஏற்பட்ட நட்பு பல வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதனையடுத்து நெல்சன் திலீப்குமார் வேட்டை மன்னன் படத்தை ஆரம்பித்தபோது ரெடினுக்கும் வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அந்த படம் சில காரணத்தால் வெளியாகவில்லை.
ஹிட்டடித்த படங்கள்: இதையடுத்து, கோலமாவு கோகிலா படத்தில் ரெடின் கிங்ஸ்லிக்கு வாய்ப்பு கொடுத்தார் நெல்சன். அந்தப் படம் மெகா ஹிட்டாக ரெடினின் கதாபாத்திரமும் கவனம் ஈர்த்தது. இதன்பின், எல்கேஜி, கூர்கா, ஏ1, ஜாக்பாட், நெற்றிக்கண், டாக்டர், அண்ணாத்த, இடியட், பீஸ்ட், ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். மேலும், நயன்தாராவின் 75வது படமான அன்னபூரணி படத்திலும் நடித்துள்ளார்.
காதல் திருமணம்: பிஸியான நடிகராக வலம் வரும் ரெடின் கிங்ஸ்லிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்தனர். ரெடின் சினிமாவில் க்ரூப் டான்சராக இருந்த போது நடிகை சங்கீதாவை காதலித்தார். பல ஆண்டுகள் இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டார்.
ரெடின் கிங்ஸ்லி பிஸ்னஸ்: தற்போது சோஷியல் மீடியாவில் இவர் பற்றி பேச்சு ரெடின் கிங்ஸில் செய்யும் பிற தொழில்கள் குறித்த தகவல்களும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியை வைத்திருப்பதாகவும் அதன் பெயர் ஸ்பெல் ஃபோன் என்றும் கூறப்படுகிறது. அந்த கம்பெனி மூலம்தான் பொருட்காட்சி, கண்காட்சிகளில் இடம்பெறும் ஜெயண்ட் வீல்கள், குழந்தைகள் விளையாடுவதற்காக சாதனங்களையும் வைத்து இருக்கிறார்.
சொத்து மதிப்பு: இது மட்டுமில்லாமல், டான்ஸ் பள்ளி ஒன்றை ஆரம்பித்தும் நடனமும் கற்றுக்கொடுத்து வருகிறார். இப்படி பல வழிகளில் இருந்து இவருக்கு பணம் குவிந்து வருகிறது. அந்த வகையில், ரெடின் கிங்ஸ்லி சொத்து மதிப்பு சுமார் 40 முதல் 50 கோடி வரை இருக்கும். மேலும் இவரிடம் பல விலை உயர்ந்த சொகுசு கார்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











