»   »  அரசியலில் ரஜினி, சரவணா ஸ்டோர்ஸ் ஓனரின் அதிரடி திட்டம்: கேட்டால் ஆடிப்போயிடுவீங்க ஆடி...

அரசியலில் ரஜினி, சரவணா ஸ்டோர்ஸ் ஓனரின் அதிரடி திட்டம்: கேட்டால் ஆடிப்போயிடுவீங்க ஆடி...

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினி இடத்தை நிரப்ப சரவணா ஸ்டோர் உரிமையாளர் தான் வரவேண்டும்- வீடியோ

சென்னை: ரஜினிகாந்த் தனிக் கட்சி துவங்கும் நேரத்தில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளருக்கு புதிய ஆசை ஏற்பட்டுள்ளது.

மலேசியாவில் நடக்கும் நட்சத்திர கலைவிழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாஸன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இருவரையும் ஒரே இடத்தில் பார்த்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

நடிகர் சங்கத்தை சேர்ந்த 350 பேர் மலேசியா சென்றுள்ளனர்.

மலேசியா

மலேசியா

மலேசியா கலை நிகழ்ச்சி லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் ஸ்பான்சர் செய்துள்ளது. இதனால் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணா அருள் மலேசியா சென்றுள்ளார்.

 லெஜன்ட்

லெஜன்ட்

மலேசியா நிகழ்ச்சியில் ரஜினிகாந்தும், சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரும் அருகருகே அமர்ந்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கலாய்ப்பவர்கள் கலாய்த்தாலும் பலர் சரவணனை பாராட்டுகிறார்கள்.

நடிப்பு

நடிப்பு

சரவணா அருள் படத்தில் நடிக்கப் போவதாக முன்பு செய்திகள் வெளியாகின. அவரிடம் கேட்டதற்கு, எனக்கு அப்படி எந்த ஐடியாவும் இல்லை என்று தெரிவித்தார். இந்நிலையில் மலேசியாவில் அவர் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படம்

படம்

விளம்பர படங்களில் நடிக்கிறீர்களே, சினிமா படத்தில் நடிப்பீர்களா என்று மலேசியாவில் சரவணா அருளிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ நல்ல திரைக்கதை கிடைத்தால் நடிப்பேன் என்று பதில் அளித்துள்ளார்.

 நடிகர் சங்கம்

நடிகர் சங்கம்

நடிகர் சங்க கட்டிடம் கட்ட ரூ. 2.5 கோடி நிதியை அளித்துள்ளார் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர். அதை ரஜினியும், கமலும் பெற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Saravana stores owner Saravana Arul has given Rs. 2.5 crore to Nadigar Sangam. He has said that he is ready to act in movies if the story is good and impressive.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X