Pa Ranjith net worth: தங்கலான் இயக்குநர் பா ரஞ்சித்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சென்னை: இன்று பிறந்த நாளை கொண்டாடி வரும் இயக்குனர் பா இரஞ்சித்தின் சொத்து மதிப்பு மற்றும் அவரின் சம்பளம் எவ்வளவு என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சென்னை 28 திரைப்படத்தில் இயக்குனராக பணியாற்றிய பா. ரஞ்சித், அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார்.

முதல் திரைப்படத்திலேயே வித்தியாசமான கதையை கொடுத்து மக்கள் மத்தியில் பெயர் எடுத்தார்.
இயக்குநர் பா ரஞ்சித்: முதல் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கினார். சுவரில் நடக்கும் அரசியல் சண்டை குறித்து அப்பட்டமாக காட்சிப்படுத்தி பேசி நன்மதிப்பை பெற்று, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்த திரைப்படங்களை இயக்கினார். சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட பா. ரஞ்சித் சமூக கருத்துடைய படங்களை இயக்கினார்.
சார்பட்டா பரம்பரை: பா ரஞ்சித் கடைசியாக, சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கினார். இதில். ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் விஜய் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திலும், பா.ரஞ்சித் தன்னுடைய வழக்கமான அரசியலை துணிச்சலாக பேசி இருப்பார். 1970ம் ஆண்டு சென்னையில் நடந்த பாக்ஸிங்கை கண்முன் கொண்டு வந்து இருப்பார் குறிப்பாக திமுக அதிமுக, எமர்ஜென்சி காலக்கட்டம் பற்றி பல வசனங்கள் இப்படத்தில் இடம் பெற்றன.
தங்கலான்: பா.ரஞ்சித் தற்போது, அதிக பொருட்செலவில் உருவாகி வரும் தங்கலான் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க, ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷனும் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.
சொத்து மதிப்பு: ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏதோ ஒரு வழியில் ஒரு உந்து சக்தியாக விளங்கும் இயக்குனர் பா.ரஞ்சித் தனது 40வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஒரு படத்திற்கு 10 கோடி சம்பளமாக வாங்கும் இவருக்கு 43 கோடி சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











