போத்தனூர் தபால் நிலையம் படத்தின் அடுத்த பாகங்கள் பத்தி தெரியுமா?: இயக்குநரே இப்படி சொல்லிட்டாரே!

சென்னை: ஆஹா ஓடிடியில் வெளியான 'போத்தனூர் தபால் நிலையம்' திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

புதுமுக இயக்குநர் பிரவீன் இயக்கி அவரே ஹீரோவாக நடித்த இத்திரைப்படம் 90ஸ் கிட்ஸ்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தது.

தபால் நிலையத்தின் பின்னணியில் நடக்கும் கொள்ளையும், அதனை துப்பறியும் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி இருந்தது.

புது முயற்சிகளுக்கு வரவேற்பு

புது முயற்சிகளுக்கு வரவேற்பு

தமிழ் சினிமாவில் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் திடீரென வெளியாகும் சில திரைப்படங்கள், சூப்பர் ஹிட் அடித்துவிடும். அதிலும் புதுமையான முயற்சிகள் என்றால் கேட்கவே வேண்டாம். மேலும், அது புதுமுகங்களின் படைப்பாக இருந்தாலும், படம் நன்றாக இருந்துவிட்டால் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து விடுவார்கள். அப்படி ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் வெகுவாகப் பாரட்டப்பட்ட திரைப்படம் தான் 'போத்தனூர் தபால் நிலையம்.'

கதை பழசு, மேக்கிங் புதுசு

கதை பழசு, மேக்கிங் புதுசு

போத்தனூரில் உள்ள தபால் நிலையத்தில் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. அதனால் பாதிக்கப்படும் அந்த தபால் நிலைய மேலாளரின் மகனும் அவனது நண்பர்களும் கொள்ளையடித்தவர்கள் யாரென கண்டுபிடிக்க முயல்கிறார்கள். கடைசியில் துப்பறிந்தார்களா, இல்லையா? அதன் பின்னர் என்ன நடந்தது என்பது தான் கதை. ஆனால், இதனை 90களின் காலக்கட்டத்தில் நடப்பதாகக் காட்சிகளையும் திரைக்கதையும் நகர்த்திய மேக்கிங் தான் தரமான சம்பவம்.

90ஸ் கிட்ஸ் கொண்டாட்டம்

90ஸ் கிட்ஸ் கொண்டாட்டம்

இந்தப் படத்தின் அனைத்துக் காட்சிகளும் 90களில் நடப்பதாக மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதற்காக படக்குழுவினர் அனைவரும் மிக கடுமையாக உழைத்திருப்பதை படத்தின் காட்சிகள் மூலம் காணலாம். பழைய கம்ப்யூட்டர், ராஜ்தூத் பைக், பழைய டெலிபோன் என காட்சிகளுக்குள் வந்த ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துக்கியிருப்பார் இயக்குநர் பிரவீன். இது 90ஸ் கிட்ஸ்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

மூன்று பாகங்கள்

மூன்று பாகங்கள்

அட்டகாசமான சஸ்பென்ஸ் திரில்லராக ரசிகர்களை கவர்ந்த 'போத்தனூர் தபால் நிலையம்' படத்தின் க்ளைமேக்ஸில், அடுத்து இரண்டு பாகங்கள் வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், ரசிகர்களிடம் 2ம், 3ம் பாகங்கள் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகமாகின. முதல் பாத்தை விடவும் அடுத்த இரண்டு பாகங்கள் செம்மையாக இருக்கும் என ஏகத்துக்கும் எதிர்பார்க்க வைத்துள்ளது.

இது என்ன புதுசா இருக்கு

இது என்ன புதுசா இருக்கு

இந்த நிலையில், போத்தனூர் தபால் நிலையத்தின் அடுத்த பாகங்கள் குறித்து, இயக்குநர் பிரவீன் தனது முகநூல் பக்கத்தில் புதிய அப்டேட் கொடுத்துள்ளார். அதாவது 2ம், 3ம் பாகங்களுக்கான கதை எழுதிவிட்டதாகவும், ஆனால், அதற்கு முன்னால் இன்னொரு படம் இயக்க கமிட் ஆகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால், போத்தனூர் தபால் நிலையம் படத்தின் 2ம் பாகம் முதலில் வெளியாகுமா அல்லது புதிய படம் உருவாகுமா எனத் தெரியவில்லை எனக் கூறியுள்ளார். பிரவீனின் இந்தப் பதிவு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X