என்னை காமெடியன் ஆக்கிய இயக்குநர்.. கடுப்பான பகத் பாசில்!

சென்னை: மாரிசெல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படத்தில், சாதிய வன்மம் நிறைந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரலும் கொண்டாடப்பட்ட நடிகர் பகத் பாசில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து கூறியுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

வருஷம் 16, பூவே பூச்சூட வா, காதலுக்கு மரியாதை போன்ற வெற்றித் படங்களை இயக்கிய இயக்குநர் ஃபாசிலின் மகன் தான் ஃபகத் ஃபாசில். சினிமாவில் நடிகராக வேண்டும் என்று விரும்பிய இவர், அப்பா ஃபாசில் உதவியால் கையெத்தும் தூரத்து என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். ஆனால், அந்த படம் விமர்சகர்களால் படு மோசமாக விமர்சிக்கப்பட்டது. மிகப் பெரிய இயக்குநரின் மகனுக்கு நடிப்பு வரவில்லை என பல பத்திரிகைகள் அவரை அவமானப்படுத்தின.

Do you know the character of fahad fazil in Rajinikanth s film Vettaiyan

நடிகர் பகத் பாசில்: இதனையடுத்து, ஃபகத் நடிப்பை விட்டு விட்டு, அமெரிக்கா சென்று விட்டார். ஏழு வருட படிப்பிற்கு பிறகு, மீண்டும் 2009 ஆம் ஆண்டு கேரளா கஃபே என்ற குறும் பட த்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த ஃபகத் ஃபாசில். அந்தப்படத்திற்கு பின், ஹீரோ, வில்லன் என எந்தவொரு பாரபட்சமுமின்றி, கிடைத்த வாய்ப்புகளில் நடித்து படிப்படியாக முன்னேறி, மலையாள சினிமா தாண்டி இன்று இந்திய அளவில் அறியப்படும் நடிகராக இருக்கிறார்.

மாமன்னன் பகத் பாசில்: லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் பகத்தின் நடிப்பு பாராட்டப்பட்ட நிலையில், ஆனால், அந்த கதாபாத்திரத்தையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ரவீணா ரவி உள்ளிட்ட பலர் நடித்த மாமன்னன் படத்தில் ரத்னவேலு கதாபாத்திரத்தில் மனுஷன் மிரட்டி எடுத்து விட்டார். தியேட்டரில் படம் வெளியான போது கூட டிரெண்டாகாத பகத் ஃபாசில் நெட்பிளிக்ஸில் மாமன்னன் படம் வெளியான போது, ரத்னவேல் கதாபாத்திரத்தை பாராட்டி வீடியோக்களை வெளியிட்டன. இதையடுத்து பகத் பாசில், இந்தியளவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து விட்டது.

வேட்டையன் படத்தில்: தற்போது இவர், ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இதுகுறித்து பேட்டி அளித்துள்ள அவர், விக்ரம் படத்தில் நான் ஒரு டெர்ரரான கேரக்டரில் நடித்தேன். கமல்ஹாசன் கேரக்டரை விட எனக்கு அந்த கேரக்டரில் முக்கியத்துவம் இருந்தது. கிட்டத்தட்ட அந்த படத்தின் ஹீரோ நான் தான் என்று ரசிகர்கள் என்னை கொண்டாடினார்கள்.

ஆச்சரியமாக இருந்தது: ஆனால், வேட்டையன் படத்தில் என்னை இயக்குனர் ஞானவேல் ஒரு காமெடியனாக பயன்படுத்தி உள்ளார். முதலில் ரஜினிகாந்த் படத்தில் காமெடி கேரக்டரா? என்று நான் யோசித்தேன். அதன் பிறகு அந்த கதாபாத்திரம் குறித்து விரிவாக என்னிடம் கூறிய போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்றும் அதனை அடுத்து தான் அந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X