ஜோதிகாவை ஏன் சூர்யா கல்யாணம் செஞ்சீங்க?..உள்ளாடை மீது கோட் போட்டப்பவே தெரியும்..ஓவராக பேசிய சுசித்ரா

சென்னை: சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு அந்தப் படம் வெளியானாலும் படுதோல்வியை சந்தித்திருக்கிறது. முக்கியமாக பெரும் ட்ரோல்களையும் சந்தித்திருக்கிறது. இருந்தாலும் 127 கோடி ரூபாயை இதுவரை அப்படம் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் கங்குவா படத்துக்கு சப்போர்ட் செய்து ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் போட்டிருந்தார். இந்நிலையில் ஜோதிகாவை விமர்சித்து சுசித்ரா வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி தோல்வியடைந்தது. பலரும் கடுமையாக விமர்சனம் வைத்த சூழலில் நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று, "இதனை சூர்யாவின் மனைவியாக எழுதவில்லை. சினிமா ரசிகையாகவும், ஜோதிகாவாகவும் எழுதுகிறேன். நடிகராக இருப்பதற்காகவும், சினிமாவை முன்னோக்கி அழைத்து செல்ல கனவு காண்பதற்காகவும் சூர்யாவை நினைத்து பெருமையாக இருக்கிறது. படத்தின் முதல் அரைமணி நேரம் ஒர்க் அவுட் ஆகவில்லைதான். ஒலியும் சரியாக இல்லைதான். அதேசமயம் குறைபாடுகள் என்பது படத்தில் ஒரு பகுதியாகும்.

kanguva jyothika suriya

மூன்று மணி நேரம்: முழுமையான மூன்று மணி நேரத்திலிருந்து முதல் அரைமணி நேரம் சரியில்லைதான். இருந்தாலும் இது ஒரு முழுமையான சினிமா அனுபவம். தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத கேமரா வேலையை ஒளிப்பதிவாளர் வெற்றி செய்திருக்கிறார். ஊடகங்கள் மற்றும் சிலரின் நெகட்டிவ் விமர்சனங்கள் எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது. பெரிய பட்ஜெட் படங்களில் பெண்களை பின் தொடர்வது, இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவது போன்ற படங்களுக்கு இந்த அளவு நெகட்டிவ் விமர்சனங்களை அவர்கள் கொடுக்கவில்லை.

கங்குவா பாசிட்டிவ்: படத்தின் இரண்டாம் பாதியில் பெண்களின் ஆக்‌ஷன் காட்சி போன்ற பாசிட்டிவ்களை விமர்சகர்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். 3டி தொழில்நுட்பம் உள்ளிட்டவைகளில் படக்குழு எடுத்துக்கொண்ட முயற்சிக்கு கைதட்டல் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் முதல் நாள் முதல் ஷோ முடிவதற்கு முன்பாகவே கங்குவாவுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தன. அதை நினைத்து வருத்தமாக இருக்கிறது. கங்குவா டீம் பெருமையாக இருங்கள். நெகட்டிவ் விமர்சனங்கள் தெரிவிப்பவர்கள் சினிமாவை உயர்த்துவதற்காக வேறு எதையும் செய்யவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் விமர்சனம்: ஜோதிகாவின் இந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை வைத்து பலரும் அவரை கடுமையாக விமர்சித்தார்கள். மேலும் முதல் அரைமணி நேரம் மட்டும்தான் சரியில்லை என்று ஜோ எதை வைத்து சொல்கிறார்; தேவையில்லாமல் பேசியிருக்கிறார் என்று கடுமையாக பேச ஆரம்பித்தார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பின்னணி பாடகி சுசித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் ஜோதிகாவை கடுமையாக பேசியிருக்கிறார் அவர்.

சுசித்ரா பேச்சு: அந்த வீடியோவில் அவர், "ஜோதிகா ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். எந்த நினைப்பில் எழுதினார் என்று தெரியவில்லை. முதல் அரைமணி நேரம் சரியில்லை என்று கூறுகிறார். எனில் அரைமணி நேரம் கழித்து படத்துக்கு அவர் வர சொல்கிறாரா. இதில் எல்லாம் என்ன லாஜிக் இருக்கிறது. கங்குவா பற்றி நான்சென்ஸாக போஸ்ட் போட்டிருக்கிறார். ஏற்கனவே அந்தப் படம் இறங்கிவிட்டது. ஜோதிகாவோ தன் பங்குக்கு மேலும் இறக்குகிறார். ஒரு தவறான படம் என்றாகிவிட்டது. அதை விட்டுவிட வேண்டியதுதானே.

சூர்யாவை யார் புகழவில்லை?: சூர்யா ஒரு சிறந்த நடிகர். அதேசமயம் அவர் ஒன்றும் சினிமாவை முதுகில் சுமந்துகொண்டு முன்னேற்றி கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவரிடம் இல்லை. ஆனால் ஜோதிகாவோ சூர்யாவுக்கு அந்த மாதிரி ஒரு எண்ணம் இருப்பதாக சொல்கிறார். அதேபோல் கங்குவா படத்தில் சூர்யாவின் நடிப்பை யார் பாராட்டவில்லை. அவர் Effort போடவில்லை என்று எந்த விமர்சகராவது சொல்லியிருக்கிறாரா. ஜோதிகாவுக்கு படிப்பறிவே இல்லை.

அப்போவே தெரியும்: எதற்காக ஒளிப்பதிவாளர் வெற்றிக்கு நன்றி சொல்ல வேண்டும். அடுத்ததாக அவர் படத்தில் நடிப்பதற்கா?.. சரியான சுயநலவாதி ஜோதிகா. நீங்கள் ஏன் சூர்யா அவரை திருமணம் செய்துகொண்டீர்கள். இப்போது ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. ஜோதிகா நீங்கள் சூர்யாவுக்கு ஒரு மனைவியா?.. பேரழகன் பிச்சைக்காரி நீங்கள் ஜோதிகா. மும்பையில் ஒரு விழாவில் உள்ளாடை மீது கோட் சூட் போட்டபோதே எல்லோருக்கும் உங்களை பற்றி தெரிந்திருக்கும். உங்கள் கடிதத்தில் நீங்கள் ஆர்.ஆர்.ஆர்., பாகுபலி ஆகிய படங்களை அவர் மறைமுகமாக விமர்சித்திருக்கிறார். ஜோதிகா நீங்கள் காது கேட்காமல், கண் தெரியாமல் இருந்ததுபோல் பேசாமலும் இருங்கள். வாயை மூடிக்கொண்டு சிலையாக மாறிவிடுங்கள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X