»   »  அடேங்கப்பா, 3 நாள் திருமண விழாவுக்கு ரூ. 10 கோடி செலவு செய்யும் சமந்தா, நாக சைதன்யா?

அடேங்கப்பா, 3 நாள் திருமண விழாவுக்கு ரூ. 10 கோடி செலவு செய்யும் சமந்தா, நாக சைதன்யா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நாக சைதன்யா, சமந்தா திருமண செலவு ரூ. 10 கோடியாம்.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தாவின் திருமணம் கோவாவில் நடைபெறுகிறது. இந்த திருமணத்திற்கு திரையுலகை சேர்ந்த ஒரு சிலரை மட்டுமே அழைத்துள்ளார்கள்.

ஹைதராபாத்தில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனைவரையும் அழைப்பார்களாம்.

கோவா

கோவா

திருமணத்தையொட்டி சமந்தா ஏற்கனவே கோவா சென்றுவிட்டார். வரும் 6ம் தேதி இந்து முறைப்படி திருமணம் நடைபெறுகிறது. அன்று சமந்தா நாக சைதன்யாவின் பாட்டிக்கு சொந்தமான பட்டுப்புடவையை அணிகிறார்.

திருமணம்

திருமணம்

வரும் 8ம் தேதி கிறிஸ்துவ முறைப்படி மீண்டும் திருமணம் நடக்கிறது. அதற்கு டிசைனர் கவுன் அணிகிறார் சமந்தா. மேலும் இரண்டு திருமணத்தின்போதும் வைர நகைகள் அணிகிறாராம்.

தனி விமானம்

தனி விமானம்

பிரபாஸ், மகேஷ் பாபு, பாலகிருஷ்ணா, ராம் சரண், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட சில பிரபலங்களை ஹைதராபாத்தில் இருந்து கோவா அழைத்து வர தனி விமானத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்களாம்.

ரூ. 10 கோடி

ரூ. 10 கோடி

3 நாட்கள் நடக்கும் திருமணத்திற்கு மட்டும் ரூ. 10 கோடி செலவு செய்கிறார்களாம். மகனின் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த விரும்புகிறார் நடிகர் நாகர்ஜுனா.

தேனிலவு

தேனிலவு

சமந்தாவும், நாக சைதன்யாவும் படங்களில் பிசியாக இருப்பதால் அதிக நாட்கள் தேனிலவுக்கு செல்ல முடியாதாம். அவர்கள் சில நாட்களுக்கு பஹாமாஸ் செல்வார்கள் என்று கூறப்படுகிறது.

English summary
Buzz is that Naga Chaitanya, Samantha wedding is goig to cost them Rs. 10 crores.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil