Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 28 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பிற்கான பலன் தேடி வரப்போகிறது...
- News
கட்டடம் இடிந்து இளம்பெண் பலியான விவகாரம்.. இடிக்கும் பணியை உடனே நிறுத்த சென்னை மாநகராட்சி ஆர்டர்!
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
நயன்– விக்கி காதலுக்கு காரணமே இவர் தானா...அடபாவமே...இவரையே கல்யாணத்துக்கு கூப்பிடலியே?
சென்னை : நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு வாழ்த்து சொல்லாமல் விட்ட பிரபலங்கள் பற்றி பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பல முக்கிய நபர்களை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கல்யாணத்திற்கே கூப்பிடாமல் தவிர்த்துள்ளனர் என்ற சலசலப்பும் சோஷியல் மீடியாக்களில் உலா வருகிறது.
நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் ஜுன் 9ம் தேதி மாமல்லபுரத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் திரையுலகை சேர்ந்த விஐபி.,க்கள், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் என 200 பேர் கலந்து கொண்டதாக கூறப்பட்டது. சினிமா பிரபலங்கள் பலர் நேரில் வந்து வாழ்த்திய போட்டோக்களும் வெளியாகின.
ஆனால் விக்னேஷ் சிவனின் பெரியப்பா, பெரியம்மா ஆகியோர் தங்களை திருமணத்திற்கு கூப்பிடவேயில்லை என வேதனையுடன் பேட்டி அளித்திருந்தனர். தற்போது நயன்தாராவின் அம்மாவும் திருமணத்திற்கு வரவில்லை. அதனால் தான் அவரை பார்க்க நயன்தாரா - விக்னேஷ் சிவன் தற்போது கொச்சி சென்றுள்ளதாக கூறுகிறார்கள்.
தமிழ்
சினிமாவை
நான்
ரொம்ப
மிஸ்
பண்றேன்..
நடிகை
நஸ்ரியா!

அத சொன்னீங்க...இத சொல்லலியே
சமீபத்தில் திருமணத்திற்கு பிறகு மனைவி நயன்தாராவுடன் ஜோடியாக வந்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்வு தார் விக்னேஷ் சிவன். இங்கு தான் நயன்தாராவை முதலில் சந்தித்தேன் என குறிப்பிட்டதோடு, இதுவரை தங்களுக்கு அளித்து வந்த ஆதரவிற்கு நன்றி என இருவருமே கூறினர், தொடர்ந்து ஆதரவு தரவும் கேட்டுக் கொண்டனர். தாங்கள் முதலில் சந்தித்த இடத்தை இடத்தை குறிப்பிட்ட விக்கி, அதற்கு பின்னால் உள்ள கதையை கூறவில்லை.

ஃபர்ஸ்ட் சாய்ஸ் அனிருத் தானா
நயன்தாராவும்- விக்னேஷ் சிவனும் நானும் ரெளடி தான் படத்தில் பணியாற்றிய போது சந்தித்து, காதலிக்க துவங்கியது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதற்கு பின்னால் நடந்த பல விஷயங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது நானும் ரெளடி தான் படத்தில் முதலில் அனிருத் தான் ஹீரோவாக நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டது. பிறகு கெளதம் கார்த்திக், லாவண்யா திரிபாதி லீட் ரோலில் நடிப்பதாகவும், கெளதம் மேனன் இந்த படத்தை தயாரிப்பதாகவும் இருந்தது. பிறகு பைனான்ஸ் பிரச்சனையால் அதை கை விட்டார் கெளதம் மேனன்.

அட இப்படி ஒரு கதை இருக்கா
பிறகு நடிகர் தனுஷ், தான் இந்த படத்தை தயாரிப்பதாக முன் வந்தார். அதற்கு பிறகு தான் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. நானும் ரெளடி தான் படத்தை தனுஷின் ஒன்டர்பார் மூவிஸ் தான் தயாரித்தது. யாரடி நீ மோகினி படத்தில் நடித்தது முதலே நயன்தாராவும், தனுஷும் நல்ல நண்பர்களாக இருந்துள்ளனர். இந்த நட்பின் அடிப்படையில் தான் நயன்தாராவை நானும் ரெளடி தான் படத்தில் நடிக்க வைத்துள்ளார் தனுஷ். நயன்தாராவை விக்னேஷ் சிவனுக்கு அறிமுகம் செய்து வைத்ததே தனுஷ் தானாம்.
Recommended Video

அவரையே கல்யாணத்துக்கு கூப்பிடலியே
ஆனால் தங்களின் காதலுக்கு காரணமாக, ஆரம்ப புள்ளியாக இருந்த தனுஷையே நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தங்களின் திருமணத்திற்கு அழைக்கவில்லை என கூறப்படுகிறது. சோஷியல் மீடியாவில் இது பற்றி பல தகவல்கள் பரவி வருகிறது. என்ன பிரச்சனை, என்ன காரணத்தால் தனுஷை இவர்கள் அழைக்கவில்லை. நானும் ரெளடி தான் படத்திற்கு பிறகு தான் விக்னேஷ் சிவன் பிரபலமான டைரக்டர் ஆனார். அவர்களின் காதலும் மலர்ந்தது. அப்படி இருக்கையில் இவரை ஏன் அழைக்காமல் விட்டனர் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.