»   »  ஜிமிக்கி கம்மல்: இந்த கேவலமான பாடலின் பொருள் உங்களுக்குத் தெரியுமா?

ஜிமிக்கி கம்மல்: இந்த கேவலமான பாடலின் பொருள் உங்களுக்குத் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த கேவலமான பாடலின் பொருளை தெரிந்து கொள்ளுங்கள் என்று ஒருவர் ஜிமிக்கி கம்மல் பாடலின் பொருளை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் ஜிமிக்கி கம்மல் பாடல் பிரபலமாகியுள்ளது. ஆசிரியை ஷெரில் ஆடிய வீடியோவை நம் தமிழ் இளசுகள் மீண்டும் மீண்டும் பார்த்துள்ளனர்.

இந்நிலையில் அந்த ஜிமிக்கி கம்மல் பாடலின் அர்த்தத்தை ஒருவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கேவலமான பாடல்

இந்த கேவலமான பாடலின் பொருள் உங்களுக்குத் தெரியுமா? இந்த பாடலின் முன் இரண்டு வரிகளின் அர்த்தம் என்னவென்று பாருங்கள்!

' என்டம்மெட ஜிமிக்கி கம்மல்!
என்டப்பன் கட்டொண்டு போயே!
என்டப்பன்டெ பிராந்தி குப்பி!
என்டம்மா குடிச்சு தீர்த்தே!'

பொருள்

பொருள்

அதாவது 'என்னுடைய அம்மாவின் ஜிமிக்கி கம்மலை அப்பா திருடிக் கொண்டு போய் அதை விற்று சாராயம் வாங்கிக் கொண்டு வந்தார். இதனால் கோபமடைந்த அம்மா அந்த சாராய பாட்டிலை எடுத்து தானே முழுவதையும் குடித்துத் தீர்த்துவிட்டாள்' என்பதே அதன் அர்த்தம். இந்த கேவலமான பாடலின் அர்த்தம் புரியாமல் இவ்வளவு தமிழர்கள் அந்தப் பாடலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்!

ஜொள்ளு

பாடலை ரசித்தவர்களை விட ஆடிய பெண்களை ஜொள்ளு விட்டு ரசித்தவர்கள் தான் அதிகம் அதனால் பாடல் வரி முக்கியம் கிடையாது என ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

பாடல் வரிகள்

பாடல் வரிகள் கவனிப்பது என்பது கண்ணதாசன் காலத்தோடு முடிந்தது
இப்பொழுது எல்லாம் மெட்டுதான் தமிழ் பாடல்களே புரிவதில்லை மெட்டு மட்டும் தான் இப்போது என மற்றொருவர் கமெண்ட் அடித்துள்ளார்.

Read more about: video, வீடியோ
English summary
Do you the meaning of Jimikki Kammal song that has impressed the youngsters of Tamil Nadu?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil