Don't Miss!
- Finance
தங்கம் வாங்க இது சரியான சான்ஸ்.. ஏன் தெரியுமா.. இன்று விலை எப்படியிருக்கு?
- News
சர்ச்சை பேச்சால் மீண்டும் பாபா ராம்தேவ் மீது பாய்ந்தது வழக்கு! மத மோதலை தூண்டியதாக புகார்!
- Technology
இப்படி ஒரு அம்சம் நம்ம Mobile போன்ல இருக்கா? WhatsApp யூசர்ஸ் கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்.!
- Sports
1.5 வருட காத்திருப்புக்கு நியாயம் கிடைக்குமா? கே.எஸ்.பரத் vs இஷான் கிஷான்.. யார் விக்கெட் கீப்பர்??
- Lifestyle
கொலஸ்ட்ரால் மற்றும் பிபி-க்கு முற்றுப்புள்ளி வைக்கும் 'வெங்காய டீ'.. அதைத் தயாரிப்பது எப்படி?
- Automobiles
டாடா எடுத்த திடீர் முடிவு... உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் வாடிக்கையாளர்கள்!
- Travel
சென்னை to டெல்லி விமான பயணமா - டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
க்ரூமிங்னா என்னன்னு தெரியுமா... ஆங்கரின் கேள்வியால் ஐஸ்வர்யா மேனன் ஏன் கடுப்பானார்?
சென்னை: காதலில் சொதப்புவது எப்படி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா மேனன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு தென்னிந்திய மொழிகளில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
தீயா வேல செய்யணும் குமாரு உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது சிவாவுடன் நடித்த தமிழ்ப் படம் 2 தான். அதன் பின்னர், நான் சிரித்தால் படத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
கடந்த ஜூன் 24-ஆம் தேதி அசோக் செல்வன் நடிப்பில் வெளியான வேழம் திரைப்படத்தில் ஜனனியுடன் சேர்ந்து இன்னொரு கதாநாயகியாக நடித்திருந்தார்.
கோலிவுட்டின்
அடுத்தடுத்த
மாஸ்
திருமணங்கள்...
லிஸ்டில்
இணைந்த
ஹரீஷ்
கல்யாண்!

ஈரோடு பெண்
அடிப்படையில் மலையாளியாக இருந்தாலும், ஐஸ்வர்யா பிறந்து வளர்ந்தது எல்லாம் ஈரோட்டில்தான். சென்னையில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு நடிக்க வந்துவிட்டார். பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியலில் ஒரு கதாப்பாத்திரத்தில் அறிமுகமானார். சமீபத்தில்தான் அவர் அந்த சீரியலில் நடித்திருந்ததே பலருக்கும் தெரிய வந்தது. அந்த வகையில் சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்தவர்களில் இவரும் ஒருவராக கருதப்படுகிறார்.

சமூக வலைதளம்
சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர். ஜிம்மில் வெர்க் அவுட் செய்வது, கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது என எப்போதும் ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலம். சில நடிகைகள் மட்டும் தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கும் சமூக வலைதளத்தில் அக்கவுண்ட் வைத்திருப்பார்கள். அந்த வகையில் ஐஸ்வர்யா மேனனும் தனது செல்லப் பிராணிக்கு என தனி அக்கவுண்ட் வைத்துள்ளார்.

வேழம்
புதுமுக இயக்குநர் சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில் ரொமான்டிக் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள வேழம் திரைப்படம் திரையரங்குகளில் பல தரப்பட்ட விமர்சனங்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை அசோக் செல்வன், ஜனனி மற்றும் ஐஸ்வர்யா மேனன் தீவிரமாக புரமோட் செய்து வருகின்றனர்.

பிளாஸ்டிக் சர்ஜரி
சமீபத்தில் வேழம் படத்திற்காக மூவரும் கலந்து கொண்ட ஒரு பேட்டியில், உங்களது முகத்தில் நீங்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளதாக மக்கள் வைக்கும் விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்று ஆங்கர் கேட்ட கேள்விக்கு, ஆங்கிலத்தில் க்ரூமிங் என்ற ஒரு சொல் உண்டு. அதாவது ஆண்டுகள் மாற மாற ஒருவருடைய தோற்றமும் மாறும். அப்படித்தான் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சீரியலில் இருந்ததற்கும் இப்போதைக்கும் என் முகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சையெல்லாம் செய்து கொள்ளவில்லை என்று கராராக பதில் அளித்துள்ளார்.