அர்ச்சனாவின் மகள் சாரா வாங்கிய சொகுசு கார்.. விலை எவ்வளவு தெரியுமா?
சென்னை: சின்னத்திரை உலகில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் அர்ச்சனா. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவதால், 'ரியாலிட்டி ஷோ குயின்' என்ற பெயரை பெற்றவர். சமீபத்தில் முடிவடைந்த சரிகமபா 5வது சீசனையும் மிக சிறப்பாக நடத்தி முடித்தார். தனது தனித்துவமான தொகுப்பு, கலகலப்பான பேச்சுத் திறன் மற்றும் அன்பான பழகுதன்மையால் அனைத்து வயதினரிடமும் பெரும் ரசிகர்களை பெற்றுள்ளார்.
அர்ச்சனாவை போலவே, அவரது மகள் சாராவும் ஜீ தமிழில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த தகவல். தற்போது தொகுப்பில் இருந்து ஓரளவு விலகி இருந்தாலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். தனது அன்றாட வாழ்க்கை பயணம், மேக்கப் டிப்ஸ், தனது சித்தியுடனும் அம்மாவுடனும் அடிக்கு லூட்டியை சுவாரசியமான வீடியோவாக்கி பதிவிட்டு வருகிறார்.

சொகுசு கார்: இந்நிலையில், தற்போது சாரா தனது வாழ்க்கையில் நடந்த ஒரு மிக மாஸான அப்டேட்டை பகிர்ந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அதாவது, சாரா புதிய காரை வாங்கியிருக்கிறார். அது சாதாரண கார் அல்ல... Mahindra Batman Edition எனும் ஸ்பெஷல் மாடல் கார். அந்த காரை வாங்குவதற்காக குடும்பத்தினருடன் சேர்ந்து ஷோரூமிற்கு சென்று காரை வாங்கி உள்ளார். அப்போது எடுத்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சாரா. குடும்பத்தினர் அனைவரும் பெரும் உற்சாகத்துடன் புதிய காரை சாரா பாசத்துடன் பெற்றுக் கொண்ட வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. பலரும் சாராவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சாரா வாங்கியுள்ள Mahindra Batman Edition காரின் மதிப்பு ₹27 லட்சத்திற்கும் மேல் மதிப்புடையது என்று கூறப்படுகிறது. இளம் வயதிலேயே விலை உயர்ந்த காரை சாரா வாங்கி இருப்பது ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











