DD Neelakandan: தாய் ஸ்தானத்தில் டிடி.. தம்பி கல்யாணத்தில் கட்டிய புடவையின் விலை எவ்வளவு தெரியுமா?
சென்னை: பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி (திவ்யதர்ஷினி) தனது தம்பி கல்யாணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. எங்கு பார்த்தாலும் டிடியின் சகோதரர் திருமண கொண்டாட்டம் பற்றிய பேச்சே அதிகமாக உள்ளது.
சமீபத்தில் டிடி தனது இன்ஸ்டாகிராமில் தம்பி தர்ஷனுக்கு வெளிநாட்டு பெண்ணான அஜாராவுடன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றதை போட்டோவுடன் உணர்ச்சிபூர்வமாக பதிவிட்டு இருந்தார். இந்த திருமண நிகழ்ச்சியை டிடியின் அக்கா பிரியதர்ஷனி, அவரின் கணவர் மற்றும் மகன் முன்னிலையில் நடைபெற்றது. தனது தம்பிக்கு அம்மாவாக இருந்து திருமணத்தை நடத்தி உள்ளார் பிரியதர்ஷினி. திருமணத்திற்கு முன்பும், பின்னரும் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அவர் இணையத்தில் பதிவிட்டு வருகிறார். மேலும், திருமண ரிசப்ஷன் மற்றும் பார்ட்டி சிறப்பாக முடிந்ததாக பதிவிட்டு இருந்தார்.

புடவையின் விலை: இதனைத் தொடர்ந்து, தம்பியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நடித்துவரும் பார்வதி வெங்கட்டராமன், ஹரிப்பிரியா, காயத்ரி ராஜா, ராஜி ஸ்ரீ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த ரிசப்ஷன் புகைப்படங்கள் பிரியதர்ஷினி தனது இன்ஸ்டாகிராமி பதிவிட்டு இருந்தார். தற்போது டிடி திருமணத்திற்கு அணிந்திருந்த புடவையின் விலை குறித்து தகவல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டிடி அணிந்திருந்தது பாரம்பரியமான காஞ்சிபுரம் புடவை என்றும், அதன் விலை ரூ.19 ஆயிரத்து 500 என்றும் கூறப்படுகிறது. எளிமையும், அழகும் கலந்து காணப்பட்ட அந்த புடவை பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்த புடவை மட்டுமில்லாமல் கல்யாணத்தின் போது ஒரு மணிநேரத்திற்கு ஒரு புடவையுடன் காட்சி அளித்தார். அதோடு,ரிசப்ஷன் மற்றும் பார்ட்டிக்கு அவர் அணிந்து இருந்த உடையும் அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
திவ்யதர்ஷினி: 20 ஆண்டுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருக்கும் டிடி, ரசிகர்களின் மனதை வென்ற தொகுப்பாளினியாக இருக்கிறார். எந்த நடிகர், நடிகை பிரபலமாக இருந்தாலும், அவர்களை ஈசியாக அணுகி அவர்களின் மனதை வென்று விடக்கூடிய திறமை 'டிடி' இடம் இருக்கிறது. 'காபி வித் டிடி' என்கிற நிகழ்ச்சிக்கு தொகுத்து வழங்கி பிரபலமான டிடி. தற்போது முக்கியமான அரசியல் நிகழ்ச்சிகள், ஸ்டார் நடிகர்கள் படத்தின் இசை வெளியீட்டு விழா என மிகவும் அறிதான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.


Click it and Unblock the Notifications











