25 வருட உழைப்பு.. சொகுசு கார் வாங்கிய அர்ச்சனா.. விலை எவ்வளவு தெரியுமா?
சென்னை: சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வரும் அர்ச்சனா, தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கிறார். தற்போது சோஷியல் மீடியாவில் எந்தப்பாக்கம் சென்றாலும் அர்ச்சனாவின் பேச்சைத்தான் பார்க்க முடிகிறது. விஜே, ஆர்ஜே, நடிகை என பலவித திறமைகளுடன் மாஸ் காட்டி வரும் அர்ச்சனா, புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அந்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்.
தமிழில் முன்னணி தொகுப்பாளினியாக இருப்பவர் விஜே அர்ச்சனா. சன் தொலைக்காட்சியில் இளமை புதுமை, காமெடி டைம் என பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானார். இவர் 2004ம் ஆண்டு வினீத் என்பவரை திருமணம் செய்து கொண்டதை அடுத்து, சின்னத்திரையில் தலைகாட்டாமல் இருந்தார். இதையடுத்து, விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பது போல ஜீ தொலைக்காட்சியில் மீண்டும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அந்த தொலைக்காட்சியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக வலம் வந்தார்.

தொகுப்பாளினி அர்ச்சனா: இதையடுத்து, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு அன்பு தான் எல்லாம்... அன்பு ஜெயிக்கும் என்று மீண்டும் மீண்டும் சொல்லி மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்தார். அதனைத் தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இவர் தொகுப்பாளினியாக மட்டும் இல்லாமல், சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படத்தில் அர்ச்சனா அவரது மகள் சாரா இருவரும்,நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் மிகவும் முக்கியமான ரோலில் சாரா நடித்து பட்டையை கிளப்பி இருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வசூலை வாரிக் குவித்தது. இதைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
திறமையான பேட்டி: தற்போது சோஷியல் மீடியாவில் எந்த பக்கம் திரும்பினாலும் அர்ச்சனாவின் முகம் தான் வருகிறது. அந்த அளவிற்கு பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார். பேட்டியில் இவர் கேட்கும் கேள்வி உணர்வுபூர்வமாக இருப்பதால், அவரின் பேட்டியை பார்ப்பதற்கு என்றே தனிக்கூட்டம் இருக்கிறது. இவரின் பேட்டி வெளியான சில மணி நேரத்திலேயே இணையத்தில் வைரலாகி விடுகிறது.
சொகுசு கார்: இந்த நிலையில் தொகுப்பாளினி அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சொகுசு கார் வாங்கி இருக்கும் வீடியோவை ஷேர் செய்துள்ளார். ஒரு நிமிடத்திற்கு மேல் ஓடக்கூடிய அந்த வீடியோவில் அர்ச்சனா, அவருடைய மகள், தங்கை, அதாவது, குடும்பத்துடன் சேர்ந்து சொகுசு கார் வாங்கப் போய் இருக்கிறார். அப்போது அந்த இடத்திலேயே கேக் வெட்டி மகிழ்ச்சியை தனது குடும்பத்துடன் வெளிப்படுத்தி உள்ளார்.
விலை எவ்வளவு தெரியுமா: அர்ச்சனா வாங்கி இருக்கும் காரின் விலை சுமார் 75 லட்சம் ரூபாய் என்றும், Mercedes-Benz GLC ரக காரை அவர் வாங்கி இருக்கிறார். மேலும், இந்த காரை வாங்க 25 வருடம் கஷ்டப்பட்டு உழைத்தேன் என்று எமோஷனல் ஆக அர்ச்சனா கண்ணீர் விட்டு கதறி அழுது இருக்கிறார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தில் அவரின் குடும்ப உறுப்பினர்களும் கதறி அழுது இருக்கிறார்கள். அர்ச்சனா சொகுசு கார் வாங்கி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இணையத்தில் பலரும் அர்ச்சனாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











