சோனம் கபூரின் திருமண மோதிரத்தின் விலையை மட்டும் கேட்காதீங்க ப்ளீஸ்
Recommended Video

மும்பை: பாலிவுட் நடிகை சோனம் கபூரின் திருமண மோதிரத்தின் விலையை கேட்டால் தலையே சுற்றிவிடும்.
பாலிவுட் நடிகை சோனம் கபூர் தனது காதலரான தொழில் அதிபர் ஆனந்த் அஹுஜாவை கடந்த 8ம் தேதி மும்பையில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
பெரியம்மா ஸ்ரீதேவி இறந்ததால் தனது திருமணத்தை எளிமையாக நடத்துவதாக அவர் தெரிவித்தார். ஆனால் திருமணம் ஊரே வியக்கும்படி மிக பிரமாண்டமாக நடந்தது.

சோனம்
சோனம் கபூர் தனது தாலியை தானே டிசைன் செய்துள்ளார். தாலியில் தனது ராசியான மிதுனம், ஆனந்தின் ராசியான சிம்மம் ஆகியவற்றை குறிக்கும் வகையில் இரண்டு உருவங்கள் மற்றும் சாலிடைர் கல் வைத்து டிசைன் செய்துள்ளார்.

ஆனந்த்
பெண்களுக்கு வைரம் பிடிக்கும். அது ஆனந்துக்கு தெரியாமலா இருக்கும். அதனால் தான் சோனம் கபூருக்கு ரூ. 90 லட்சத்தில் திருமண மோதிரத்தை போட்டுள்ளார். ஒரேயொரு வைரக்கல் பதித்த மோதிரத்திற்கு தான் இவ்வளவு விலை.

ஃபேஷன்
திருமணம் முடிந்தால் கையில் பெரிய வைரக்கல் மோதிரம் போடுவது பிரபலங்கள் மத்தியில் ஃபேஷனாகிவிட்டது. ஃபேஷனின் முன்னோடியான சோனம் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?

கேன்ஸ்
திருமணம் முடிந்த கையோடு சோனம் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள பிரான்ஸ் சென்றுவிட்டார். தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டியிருப்பதால் தேனிலவை தள்ளிப் போட்டுள்ளார்.

வருத்தம்
சோனம் கபூர் தனது திருமணத்திற்கு தந்தை அனில் கபூருக்கு நெருக்கமானவர்கள் சிலரை அழைக்கவே இல்லையாம். இதனால் அவர்கள் சோனம் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











