லெஜண்ட் சரவணனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? கிறுகிறுத்து போன ரசிகர்கள்!

சென்னை : சரவண ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணனின் சொத்து குறித்த தகவல் வெளியாகி அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.

தொழிலதிபரான லெஜண்ட் சரவணன், தீபாவளி, பொங்கல் வந்து விட்டால் போதும், கலர் புல்லான உடையில் இளம் நடிகைகளுடன் கடை விளம்பரத்தில் பெஸ்ட் பெஸ்ட் என ஆட்டம் போட வந்துவிடுவார்.

இவர் நடித்த விளம்பரத்திற்கு விமர்சனங்கள் கடுமையாக எழுந்த போதும் அதைப்பற்றி கவலைப்படாமல் கதாநாயகனாக மாறினார்.

தி லெஜண்ட்

தி லெஜண்ட்

அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய ஜெர்ரி & ஜெடி ஆகியோர் இயக்கிய தி லெஜண்ட் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, ஆகிய மொழிகளில் திரையரங்களில் வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றுத்தந்தது.

ஹிட் பாடல்கள்

ஹிட் பாடல்கள்

இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற வாடிவாசல் பாடல்,மொசலோ மொசலு பாடல் என அனைத்துப்பாடல்களும் செம ஹிட்டடித்தன. டான்ஸ்,சண்டை என அனைத்திலும் மனுஷன் பின்னிபெடல் எடுத்திருந்தார்.இந்த படம் 20 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஓடிடியில் நம்பர் ஒன்

ஓடிடியில் நம்பர் ஒன்

மேலும், தி லெஜண்ட் படத்தில் சயின்டிஸ்டாக சரவணன் நடித்திருந்தார். வெளிநாட்டில் படித்துவிட்டு சொந்த ஊருக்கு வரும் சரவணன், தனது நண்பன் சர்க்கரை நோயால் இறந்துவிட, இந்த நோய்யை ஒட்டுமொத்தமாக அழிக்க குறைந்த விலையில் மருந்து கண்டுபிடிக்கிறார். இதை தெரிந்து கொண்ட, ஒரு கும்பல் இவரை மருந்து தயாரிக்கவிடாமல் தடுக்கிறது .அதை எப்படி எதிர் கொண்டார் என்பது தான் தி லெஜண்ட் திரைப்படத்தின் கதை. கடந்த வாரம் இந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி நம்பர் ஒன் இடத்தை பிடித்தது.

சென்னையில் பிரம்மாண்ட வீடு

சென்னையில் பிரம்மாண்ட வீடு

இந்நிலையில்,லெஜண்ட் சரவணனின் சொத்து குறித்த தகவல் வெளியாகி உள்ளது.அதில், சென்னையில் லெஜண்ட் சரவணனுக்கு பல பிரம்மாண்டமான துணிக்கடைகள் உள்ளன. அதே போல சென்னையில் பல சொகுசு வீடுகளையும் வைத்துள்ளார். லெஜண்ட் சரவணனுக்கு இரண்டு பெண்கள், அவர்கள் இருவருக்குமே திருமணமாகிவிட்டது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சொந்த ஊரான திருநெல்வேலியில் பிரம்மாண்டமான வீட்டை கட்டி உள்ளார். அந்த வீட்டிற்கு லெஜண்ட் சரவணன் என பெயர்வைத்து இருக்கிறார்.

அண்ணாச்சியின் சொத்து மதிப்பு

அண்ணாச்சியின் சொத்து மதிப்பு

அந்த வீட்டில் இல்லாத வசதியே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் தங்கும் அளவுக்கு மூன்று அடுக்கில் பிரம்மாண்டமான வீட்டை கட்டி உள்ளார். இந்த வீட்டில் தான் தி லெஜண்ட் திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. அண்ணாச்சியின் தற்போதைய சொத்து மதிப்பு மொத்தம் சுமார் 750 மில்லியன் டாலராம். இந்திய மதிப்பில் 6000 ஆயிரம் கோடியளவில் சொத்துக்களை அண்ணாச்சி குவித்து வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X