நடிகர் நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?அப்போ இது அவங்க பெயர் இல்லையா?
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக ஜொலித்துக்கொண்டு இருக்கும் பல நடிகர், நடிகைகள் தங்களது உண்மையான பெயரை மறைத்துவிட்டு சினிமாவிற்காக பெயர் மாற்றிக்கொள்வது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் சினிமாவிற்காக பெயரை மாற்றிய நடிகர்களின் உணமையான பெயர் என்ன என்று இதில் பார்க்கலாம்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நம்மை மிரட்டிய நடிகர் விக்ரமின் உண்மையான பெயர் கென்னடி ஜான் விக்டர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்தார். டப்பிங் கலைஞரான இவர் சினிமாவில் அறிமுகமாகி பல ஹிட்படங்களை கொடுத்த இவர் விக்ரம் ஆக ஜொலித்து வருகிறார்.

விஜய்சேதுபதி: ஹீரோ, வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என எது கொடுத்தாலும், அதில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் விஜய்சேதுபதியின் இயற்பெயர் விஜயகுருநாத சேதுபதி. இவர் சினிமாவிற்காக தனது பெயரை மாற்றிக்கொண்டார்.
சூர்யா: கங்குவா என்ற மிக பிரம்மாண்டமான படத்தில் நடித்து வரும் நடிகர் சூர்யாவின் நிஜப்பெயர் சரவணன். சிவக்குமாரின் மகனான இவர், சினிமாவிற்காக சூர்யா என மாற்றிக்கொண்டார். ஆனால், சூர்யாவையும் தாண்டி ரசிகர்கள் இவரை ரோலக்ஸ் சார் என்று அழைத்து வருகின்றனர்.

தனுஷ்: கோலிவுட், பாலிஹவுட், ஹாலிவுட் என அனைத்திலும் தடம் பதித்து வரும் நடிகர் தனுஷின் உண்மையான பெயர் வெங்கடேஷ் பிரபு. கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த போது தனது பெயரை தனுஷ் என்று மாற்றிக்கொண்டார்.
ஜெயம் ரவி: மோகன் ரவி என்ற பெயரைக்கொண்ட ஜெயம் ரவி, ஜெயம் படத்தில் அறிமுகமானதால், அந்த பெயரை தனது பெயருடன் இணைத்துக் கொண்டார். நல்ல கதை அம்சம் கொண்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் இவர், அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பொன்னியின் செல்வனாக நடித்திருந்தார்.

நயன்தாரா: பெங்களூரில் பிறந்து வளர்ந்த நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன். மலையாள சிரிய கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்த இவர். கல்லூரி நாட்களில் இருந்தே மாடலிங்கில் ஈடுபட்டு வருகிறார். ஒரு மாடலிங் ஷோவில் இவரைப் பார்த்த மலையாள இயக்குநர் சத்யன் அந்திக்காட் அவரை மனசினக்கரே படத்தில் அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு இவருக்கு நயன்தாரா என்ற பெயர் வந்தது.

ஹன்சிகா மோத்வானி: வெண்ணையில் செய்த பொம்மைப்போல இருக்கும் ஹன்சிகா மோத்வானியன் உண்மையான பெயர் அன்சிக்கா பிரதீப் மோத்வானி இவர் சினிமாவிற்காக தனது பெயரை ஸ்டைலாக மாற்றிக்கொண்டார். கடந்த ஆண்டு இவருக்கு திருமணம் நடந்த நிலையில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











