ஃபர்ஸ்ட் ஃபோனை மாற்றினார்.. கடைசியில் காதலியை மாற்றினார்.. பிரதீப் ரங்கநாதனின் சீக்ரெட் ஆஃப் சக்சஸ் இதுவா?
சென்னை: பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து வரிசையாக மூன்று படங்கள் 100 கோடி ரூபாய் வசூலித்து கெத்து காண்பித்திருக்கின்றன. இதனால் குறுகிய காலத்திலேயே அதிக மார்க்கெட் உள்ள ஹீரோவாக அவர் உயர்ந்துவிட்டார். அடுத்ததாக டிசம்பர் மாதம் எல்ஐகே படம் வெளியாகவிருக்கும் சூழலில்; பிரதீப் ரங்கநாதனின் வெற்றியின் ரகசியம் குறித்து இணையத்தில் ஒரு வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது.
குறும்படம் எடுத்து பிறகு கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் அந்தப் படத்திலேயே கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார். தொடர்ந்து இயக்கத்தில் பயணப்படுவார் என்று எதிர்பார்த்திருந்த சூழலில் லவ் டுடே படத்தை தானே இயக்கி ஹீரோவாகவும் நடித்தார். அவர் ஹீரோவாக நடிக்கிறார் என்ற அறிவிப்பு வந்ததும் கண்டிப்பாக இப்படம் தேறாது என்றே பலரும் நினைத்தார்கள். ஆனால் அப்படம் 100 கோடி ரூபாய் வசூலித்தது.
அடுத்தடுத்து 100 கோடி ரூபாய் வசூல்: லவ் டுடே வெற்றிக்கு பிறகு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடித்த டிராகன், அதற்கு பிறகு கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் நடித்த டியூட் ஆகிய இரண்டு படங்களும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்ட அப்படங்களும் 100 கோடி ரூபாய் வசூலித்து ஒட்டுமொத்த கோலிவுட்டையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஹாட்ரிக் வெற்றி: முக்கியமாக தொடர்ச்சியாக மூன்று முறை 100 கோடி ரூபாய் வசூலித்த ஹீரோ என்ற பெருமையையும் அவர் பெற்றிருக்கிறார். GEN Z தலைமுறையினரிடையே மிகப்பெரிய செல்வாக்கை பிரதீப் பெற ஆரம்பித்திருக்கிறார். அவர் ஸ்க்ரீனில் வரும்போதெல்லாம் கைத்தட்டல்களும், விசில்களும் தியேட்டர் சுவரினை பிளந்தன என்றுதான் சொல்ல வேண்டும். நிச்சயம் தற்கால தலைமுறை ஹீரோக்களில் அவரே டாப் 1ல் இருக்கிறார் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
அடுத்த படம்: இப்படி வரிசையாக 3 படங்களை மெகா ப்ளாக் பஸ்டரை கொடுத்திருக்கும் பிரதீப் நடிப்பில் அடுத்ததாக எல்ஐகே திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவிருக்கிறது. இதுவரை தனக்கு கிடைத்த வெற்றியை இந்தப் படத்திலும் அவர் தக்க வைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் தொடர்ச்சியாக வெற்றி பெறுவதற்கான ரகசியம் இதுதான் என சொல்லி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
என்ன வீடியோ?: அதாவது அவர் ஹீரோவாக நடித்த முதல் படத்தில் ஃபோனை மாற்றிக்கொள்வார். அடுத்ததாக நடித்த டிராகன் படத்தில், இன்னொரு கதாபாத்திரத்தின் விடைத்தாள் இவரின் விடைத்தாளாக மாற்றப்பட்டு தேர்வில் வெற்றி பெறுவார். அதேபோல் டியூட் படத்தில் தனது காதலி இன்னொருவரை காதலிப்பதாக தெரிந்ததை அடுத்து தனது விருப்பத்தை மாற்றிக்கொண்டு காதலி ஆசைப்பட்டவரோடு அனுப்பி வைப்பார். இப்படி மாற்றிக்கொண்டதுதான் பிரதீப் ரங்கநாதனின் சீக்ரெட் ஆஃப் சக்சஸ் என்று ஜாலியாக ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி இனி அவர் Swap Star என்று அழைக்கப்படுவார் எனவும் கமெண்ட்ஸ் பறக்கின்றன. இந்த வீடியோவை பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறனும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











