இளையராஜா பயோபிக் ட்ராப்பா? கழண்டு கொண்ட தனுஷ்.. பின்னணியில் இருக்கும் காரணம்?
சென்னை: இளையராஜாவின் இசைக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. தனது இசையின் மூலம் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்திருக்கும் இசைஞானியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருப்பதாக கடந்த மார்ச் மாதம் செய்தி வெளியானது. இந்த திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார் என்றும் இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார் என்றும் அதிகாரப்பூர்வ செய்தி இணையத்தில் பரவியது. இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கிய இப்படம் ட்ராப்பாகி விட்டதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
இளையராஜா பயோபிக்: இந்த படம் தமிழில் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். மேலும், இப்படத்தின் திரைக்கதையை கமல் எழுதுவதாக கூறப்பட்டது. ஆனால், அரசியல், சினிமா என பிசியாக இருக்கும் கமல்ஹாசன் அவர்களால் நேரம் ஒதுக்கி இளையராஜாவின் கதையை கேட்க முடியவில்லை. இதனால் அவர் இந்த திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துவிட்டார். இதைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அவர்களும் தற்போதைக்கு தன்னிடம் கால் ஷீட் இல்லை என்று கழண்டு கொண்டார்.

காரணம் இதுதான்: இதுமட்டுமில்லாமல், இந்த படத்தை கனெக்ட் மீடியா, பிகே பிரைம் புரொடக்ஷன்ஸ் மற்றும் மெர்குரி மூவீஸ் தயாரிக்கும் என அறிவித்து இருந்தது. ஆனால், இளையராஜா அவர்கள் தனக்கும் படத்தில் ஒரு பங்கு வேண்டும் என கேட்டுள்ளார். இதனால், பிகே பிரைம் புரொடக்ஷன்ஸ் பின் வாங்கியது. மேலும், தனுஷ் தனது கையில் இருக்கும் படத்தை முடித்துவிட்டுத்தான் இதில் நடிப்பதாக இருக்கிறார். இதனால்,படப்பிடிப்பு தொடங்க இன்னும் ஆறு மாதத்திற்கு மேலாகும் என்பதால் கனெக்ட் மீடியாவும் பின்வாங்கி விட்டதாக சொல்லப்படுகிறது. இப்படி படத்தை தயாரிக்க யாரும் முன்வராததால், நேரடியாக டெல்லிக்கே சென்று சில தயாரிப்பு நிறுவனத்துடன் பேசி உள்ளார். ஆனால், அதுவும் சரிப்பட்டு வராததால் படம் கைவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
கைவசம் உள்ள படம்: தனுஷ் தற்போது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். முற்றிலும் இளம் நடிகர்களை வைத்து தனுஷ் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை தெடர்ந்து குபேரன் என்ற பான் இந்திய திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











