twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வரசொல்ல ஆப்பிஸ் இல்லையே.. இந்த திடீர் டிரெண்டிங்கிற்கு என்ன காரணம் தெரியுமா?

    |

    Recommended Video

    Reason behind ajith vijay fan war in twitter |அஜித் - விஜய் திடீர் டிரெண்டிங்கிற்கு காரணம் தெரியுமா?

    சென்னை: திடீரென சென்னை டிரெண்டிங்கில், வாடா வாடா ஆப்பிஸ் வாடா, வரசொல்ல ஆப்பிஸ் இல்லையே, அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ் உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் டிரெண்டாகி வருவதற்கான மூலக் காரணம் யார் தெரியுமா?

    அஜித், விஜய் ரசிகர்கள் மறுபடியும் ட்விட்டரில் சண்டையிட்டுக் கொள்ள பாஃப்டா தனஞ்செயனின் அந்த ட்வீட்டும், அதற்கு கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் கொடுத்த ரிவீட்டும் தான் காரணமாம்.

    விளம்பரங்கள் முதல் வெள்ளித்திரை வரை அசத்தி வரும் வித்யா பிரதீப்விளம்பரங்கள் முதல் வெள்ளித்திரை வரை அசத்தி வரும் வித்யா பிரதீப்

    என்ன பிரச்சனை

    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான பிகில் திரைப்படம் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் நிபுணர் பாஃப்டா தனஞ்செயன் வெளியிட்ட ட்விட்டர் பதிவு, அஜித், விஜய் ரசிகர்களிடையே மீண்டும் ட்விட்டர் சண்டையை தொடங்கி வைத்துள்ளது.

    பிகில் படம் 300 கோடி வசூல் செய்யவில்லை என அஜித் ரசிகர்கள், தொடர்ந்து ஹேஷ்டேக் போட்டு தனஞ்செயனை டார்ச்சர் செய்ய, கடுப்பான தனஞ்செயன், பிகில் படம் 80 கோடி ஷேர் பெற்றதற்கு தன்னால் ஆதாரம் காட்ட முடியும் என்றும், விஸ்வாசம் படம் சென்னையில் வசூல் செய்ததற்கு கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸிடம் ஆதாரம் கேளுங்கள் எனக் கூறியுள்ளார்.

    ரிவீட்டு

    இந்த ட்வீட்டை பார்த்த கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ், உடனடியாக அடுத்தவன் வீட்டை எட்டி பார்க்கறதுக்கு முன்னாடி தான் வீடு சரியா இருக்கான்னு பார்க்கணும், நாங்க விஸ்வாசம் வெற்றியை ஜனவரியில இருந்தே கொண்டாடிட்டு வரோம்னு பதிலடி கொடுக்க, அஜித் ரசிகர்கள், அதனை பிடித்துக் கொண்டு, விஜய் ரசிகர்களை கலாய்த்து வருகின்றனர்.

    டிரெண்டிங்

    #வரசொல்ல ஆப்பிஸ் இல்லையே, #வாடா வாடா ஆப்பிஸ்க்கு வாடா, #அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ் உள்ளிட்ட ஹேஷ்டேகுகளை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

    அஜித் ரசிகர்களுக்கு தாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என விஜய் ரசிகர்களும், அஜித் நடித்த படங்கள் பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றி அடையவில்லை என்றும், இந்தியளவில் விஸ்வாசம் ஹேஷ்டேக் வந்தது பாட் செய்து வரவழைக்கப்பட்டதாகவும் சண்டையிட்டு வருகின்றனர்.

    எல்லை மீறல்

    காமெடியாக தொடங்கப்பட்ட இந்த பாக்ஸ் ஆஃபிஸ் சண்டை தற்போது எல்லை மீறி, ஆபாச மீம்ஸ்களால் நிறைந்து வருகிறது. அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இப்படி சண்டையிட்டுக் கொள்வது ஆரோக்கியம் இல்லாத செயல். இந்த ரசிகர்கள் வணங்கும் நடிகர்கள் இப்படி ஒருத்தர் மேல விஸ்வாசத்தை காட்டுறதுக்காக மத்தவங்கள அசிங்கப்படுத்தாதீங்கன்னு சொல்லியும் இவர்கள் திருந்துவதாய் தெரியவில்லை.

    English summary
    Indeed ‘Thala-Thalapathy’ fan wars have been prevalent for quite a few years now, as fans of both actors constantly take to social media to intensify this rivalry
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X