திருப்பதியில் திருமணம் செய்யாதது ஏன்?..நயன்தாரா திடீர் முடிவுக்கு என்ன காரணம்

சென்னை : கோலிவுட்டின் செம டிரெண்டிங்கான காதல் ஜோடி என்றால், அது லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தான். இவர்கள் சோஷியல் மீடியாவில் என்ன போஸ்ட் பதிவிட்டாலும் சரி, இவர்களை பற்றி என்ன தகவல் வெளி வந்தாலும் சரி உடனடியாக அது டிரெண்டிங் ஆகி விடும்.

Recommended Video

Nayanthara VigneshShivan Marriage ... திருப்பதியில் இல்லையா? | FilmibeatTamil #Celebrity

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் முதல் முறையாக நானும் ரவுடி தான் படத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்றினர். அந்த படத்தின் போதே இருவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த 6 வருடங்களாக காதலித்து வரும் இந்த ஜோடி, கடந்த சில ஆண்டுகளாக ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருகிறார்கள்.

ஜுன் 9 நயன்தாரா திருமணம்

ஜுன் 9 நயன்தாரா திருமணம்

டிரெண்டிங்கான காதல் ஜோடியான இவர்களின் திருமணத்தை ஒட்டுமொத்த சினிமா உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த அந்த நாள் தற்போது வந்துள்ளது. இவர்களின் திருமணம் ஜுன் 9 ம் தேதி நடைபெற உள்ளது. முதலில் திருப்பதியில் தான் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டது.

நயன்தாரா திருமண அழைப்பிதழ்

நயன்தாரா திருமண அழைப்பிதழ்

ஆனால் நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமண அழைப்பிதழ் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. நீல வானம், பூக்கள், பெரிய அழகிய பங்களா, மரங்கள் ஆகியவற்றால் டிசைன் செய்யப்பட்ட இந்த அழைப்பிதழில் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் பெயர், திருமண தேதி, இடம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இந்த அழைப்பிதழும் தற்போது செம டிரெண்டிங் ஆகி உள்ளது.

திருமணம் திருப்பதியில் இல்லை

திருமணம் திருப்பதியில் இல்லை

திருப்பதியில் இவர்களின் திருமணம் நடக்க உள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், திருமண அழைப்பிதழில் மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக அச்சிடப்பட்டுள்ளது. மகாபலிபுத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தான் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளதாம். குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் தான் இந்த திருமண விழாவில் கலந்து கொள்ள போகிறார்களாம்.

ஓ...இது தான் பிளானா

ஓ...இது தான் பிளானா

திருமணம் முடிந்த சில நாட்களில் சென்னையில் பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடத்த நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் முடிவு செய்திருக்கிறார்களாம். திருமண வரவேற்பிற்கு தான் திரையுலக பிரபலங்களை அழைக்க திட்டமிட்டுள்ளார்களாம். சமீபத்தில் குலதெய்வம் கோயிலுக்கு போய் பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்து விட்டு வந்த கையோடு திருமண அழைப்பிதழ்களை கொடுக்கும் வேலையை துவங்கி விட்டார்களாம் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும்.

இடம் மாறியதற்கு இதுதான் காரணமா

இடம் மாறியதற்கு இதுதான் காரணமா

முழுக்க முழுக்க பாரம்பரிய முறைப்படி தான் திருமணம் நடத்தப்பட உள்ளதாம். அதுவும் ஒரே முறைப்படி தான் திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம். சமீபத்தில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் மகாபலிபுரத்திற்கு சென்று வந்தது கூட திருமண ஏற்பாடுகள் பற்றி பேசுவதற்கு தானாம். நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் தனிப்பட்ட வைபவமாக நடத்துவதற்காக, குறிப்பாக மீடியாக்கள் பங்கேற்பை குறைப்பதற்காக தான் திருப்பதியில் இருந்து மகாபலிபுரத்திற்கு திருமணத்தை மாற்றி விட்டார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X