twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "தலைவி "டிரெய்லர் வெளியீடு எந்த தேதியில் தெரியுமா? எலெக்ஷன் வருவதால் ரசிகர்கள்,தொண்டர்கள் ஆர்வம் !

    |

    சென்னை : முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட படம் தான் "தலைவி ".

    இந்த மாதிரி வாழ்க்கை வரலாற்று படத்திற்கு எப்போதுமே ஒரு தனி ரசிகர்களும் ,எதிர்பார்ப்பும் இருக்கத்தான் செய்கின்றனர்.

    மற்ற படங்களை விட இந்த வரலாற்று படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கின்றன.அதற்கு எலெக்ஷன் நெருங்குவதும் ஒரு முக்கிய காரணம்.

    கங்கனா ரனாவத்

    கங்கனா ரனாவத்

    ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட படம் தான் தலைவி .வரலாற்று படம் என்றாலே இருக்கும் எதிர்பார்ப்பை விட இந்த படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கின்றது. காரணம் முதலமைச்சரின் வாழ்க்கை என்பதால் தான். அப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார் கங்கனா. ஏற்கனவே இப்படத்தின் பல புகைப்படங்கள் வெளிவந்து அனைவரையும் அதிக எதிர்பார்ப்பை தூண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

    கூடுதல் பலம்

    கூடுதல் பலம்

    அரசியல் மட்டும் இல்லாமல் ஜெயலலிதாவிடம் இருக்கும் அறிய பொக்கிஷமான விஷயங்களையும் இப்படத்தில் கொண்டுவந்துள்ளார் இயக்குனர் விஜய். பரதநாட்டியம், தமிழ் மொழியைக் கற்றுக்கொள்வதிலிருந்து ஜெயலலிதாவின் பழக்கவழக்கங்களை சரியாகப் பெறுவதற்கு பல மணிநேரம் செலவழிப்பதில் இருந்து, கங்கனா இப்படத்திற்காக உழைத்து வருகிறார்.

    எம் ஜி ராமசந்திரன்

    எம் ஜி ராமசந்திரன்

    கங்கனா மற்றும் அரவிந்த் சுவாமியின் கதாபாத்திரத்தின் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோரின் வினோதமான ஒற்றுமை ஒரு முக்கிய பேசும் இடமாக இருந்து வருகிறது, மேலும் வாழ்க்கை வரலாற்றின் தோற்றம் மற்றும் உணர்வைச் சுற்றி நிறைய எதிர்பார்ப்பு உள்ளது மற்றும் பிரபல நடிகரின் வாழ்க்கையிலிருந்து எப்படிச் சின்ன நிகழ்வுகள் அரசியல்வாதியாக மாறியது என்பதை தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

    தயாரிப்பாளர் தரப்பு

    தயாரிப்பாளர் தரப்பு

    உலக அளவில் புகழ் பெற்ற முக்கியமான நபரின் கதை என்பதாலும்,அதில் இருக்கும் முக்கிய நட்சத்திர பட்டாளங்களாலும் இப்படம் பெரிய அளவில் வெற்றி பெரும் என்று தயாரிப்பாளர்களின் தரப்பில் கூறுகின்றனர்.சமீபத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று , இப்படத்தை தயாரிப்பாளர்கள் பான் இந்தியாவில் திரையரங்குகளில் 2021 ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்தனர்.

    ஜீ ஸ்டுடியோஸ்

    ஜீ ஸ்டுடியோஸ்

    விப்ரி மோஷன் பிக்சர்ஸ்,கர்மா மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் ,விஷ்ணு வர்தன் இந்தூரி மற்றும் ஷைலேஷ் ஆர் சிங் அண்ட் கோ ஆகியோரால் ஹிடேஷ் தாக்கர் மற்றும் திருமல் ரெட்டி இப்படத்தை தயாரித்துள்ளனர்.ஏப்ரல் 23 ஆம் தேதி ஜீ ஸ்டுடியோஸால் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகளவில் வெளியிடப்பட உள்ளது.

    Recommended Video

    ACTRESS MALLIKA ANGELA & UPASANA CHAT | MEDIUM RARE SHOP OPENING CEREMONY | FILMIBEAT TAMIL
    பிறந்தநாள் பரிசு

    பிறந்தநாள் பரிசு

    இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியிடுவதற்கு முக்கிய நாளை எரிதிர்பார்த்துக்கொண்டு இருந்த படக்குழுவினருக்கு கிடைத்தது சூப்பர் பிளான் .இப்படத்தின் நாயகியான கங்கனா பிறந்தநாள் மார்ச் 23 ஆம் தேதி அன்று ட்ரைலரை வெளியிட திட்டமிட்டு உள்ளனர். இதில் கூடுதல் கவனம் என்னவென்றால், எலெக்ஷன் நெருங்கும் வேளையில் வெளியிடுவதால் ரசிகர்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் தொண்டர்களின் மத்தியிலும் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக நிலவி வருகின்றது

    English summary
    "Thalaivi" is a film based on the biography of former Chief Minister Jayalalithaa.Now the crew planned to release this movie trailer on march 23.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X