»   »  பாகுபலி படத்தில் நடிக்க பிரபாஸ், ராணா, அனுஷ்காவுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

பாகுபலி படத்தில் நடிக்க பிரபாஸ், ராணா, அனுஷ்காவுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி படத்தில் நடிக்க பிரபாஸ், அனுஷ்கா, ராணா உள்ளிட்டோர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என தெரிய வந்துள்ளது.

ராஜமவுலி இயக்கிய பாகுபலி 2 படம் வெளியாகி 10 நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்துள்ளது. உலக அளவில் ரூ. 1000 கோடி வசூல் செய்த முதல் இந்திய படம் பாகுபலி 2.


இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க கலைஞர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.


ராஜமவுலி

ராஜமவுலி

படத்தை இயக்க எஸ்.எஸ். ராஜமவுலிக்கு ரூ. 28 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இன்று உலக சினிமாவே ராஜமவுலியை பார்த்து வியக்கிறது.


பிரபாஸ்

பிரபாஸ்

பாகுபலியாக நடிக்க பிரபாஸுக்கு ரூ. 60 கோடி சம்பளம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாகுபலி படத்திற்கு பிறகு அவர் தனது சம்பளத்தை ரூ. 30 கோடியாக உயர்த்தியுள்ளாராம்.


ராணா, அனுஷ்கா

ராணா, அனுஷ்கா

பல்லாள தேவனாக நடிக்க ராணாவுக்கு ரூ. 15 கோடி சம்பளமும், தேவசேனா அனுஷ்காவுக்கு ரூ. 5 கோடி சம்பளமும் அளிக்கப்பட்டுள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது.


தமன்னா, ரம்யா

தமன்னா, ரம்யா

அவந்திகா தமன்னாவுக்கு ரூ. 5 கோடியும், ராஜமாதா சிவகாமி ரம்யா கிருஷ்ணனுக்கு ரூ. 2.5 கோடியும், கட்டப்பா சத்யராஜுக்கு ரூ. 2 கோடியும் சம்பளம் அளிக்கப்பட்டுள்ளது.


English summary
The salary package of Baahubali 2 stars including Prabhas, Rana, Anushka, Tamanna, Ramya Krishnan and Sathyaraj have been revealed.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil