தக் லைஃப் படத்தின் கதை என்ன தெரியுமா? விதவிதமாக கதை சொல்லும் பேன்ஸ்!

சென்னை: கமலஹாசன் 234 படமான தக் லைஃப் படத்தின் கதை குறித்து இணையவாசிகள் விதவிதமான கதை கூறிவருகின்றனர்.

நாயகன் வெளியாகி 36 ஆண்டுகளுக்கு பிறகு, தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இயக்குனர் மணிரத்னம் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

கமலின் 234வது படமான இப்படத்தின் அறிவிப்பு முன்னரே வெளியான நிலையில், புரமோ வீடியோ கமலின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.

Do you know the story of Kamal Haasan 234 film Thug Life?

தக் லைஃப்: KH 234 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டு இருந்த நிலையில் இப்படத்திற்கு தக் லைஃப் என்று அதிகாரப்பூர்வமான தலைப்பை படக்குழு வெளியிட்டது. அந்த வீடியோவில் கமல்ஹாசன், என் பெயர் ரங்கராயர் சக்திவேல் நாயகர். எனக்கு யாகுசா என்று முத்திரை குத்தப்பட்டது என பேசி இருந்தார்.

சிம்பு நடிக்கல: யாரும் எதிர்பார்த்திடாத வகையில் இருந்த இந்த வீடியோவை ரசிகர்கள் கொண்டாடினார்கள். தமிழில் பெயர் வைக்கும் மணிரத்னம் முதன்முறையாக தனது படத்திற்கு தக் லைஃப் என ஆங்கிலத்தில் பெயர் வைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கதாபாத்திரத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவரால் நடிக்க முடியவில்லை.

Do you know the story of Kamal Haasan 234 film Thug Life?

நாயகன் பார்ட் 2: இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2024 பிப்ரவரியில் தொடங்க இருக்கும் நிலையில், இந்த படத்தின் கதை குறித்த பேச்சு சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளது. அதாவது இந்த திரைப்படம் நாயகன் பார்ட் 2 என்றும், நாயகன் படத்துல அவரோட பேரனா சக்திவேல்னு ஒரு குட்டிப்பையன் நடிச்சிருப்பாரு. அவரு தான் இந்த சக்திவேல் என்று சிலர் லாஜிக்கே இல்லாமல் பேசி வருகின்றனர்.

ஒருவேளை அந்த கதையா? மேலும், சிலர் 1800களின் கால கட்டத்தில் வாழ்ந்த தக் கூட்டம். வழிப்பறி கொள்ளையர்கள் பற்றிய கதை என்றும் மணிரத்னத்தையே குழப்பும் அளவுக்கு இணையத்தில் விதவிதமாக கதைகளை கூறி வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X