Parasakthi: பராசக்தி படத்தின் கதை இதுதானா? படம் தரமாக இருக்கும் போல.. இணையத்தில் பரவும் தகவல்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது படமாக 'பராசக்தி' படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கி இருக்கும் இப்படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன், அப்பாஸ், ராணா டகுபதி ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. தற்போது பராசக்தி கதை பற்றி தகவல் ஒன்று காட்டுத்தீப்போல பரவி உள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் பராசக்தி படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான ஹைப்பை அதிகரித்துள்ளது. நேற்று வெளியான 'நமக்கான காலம்' எனத் தொடங்கும் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டது. அறிவு எழுத பாடலை எழுதி இருக்க, ஹரி சரண், வேல்முருகன், நாகாஷ் அஜீஸ் ஆகியோர் இணைந்து பாடலை பாடி உள்ளனர். அதே போல, யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலையும், சிவகார்த்திகேயனும் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

Sivakarthikeyan Parasakthi
Photo Credit:

பராசக்தி: பராசக்தி படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராக இருந்த போதும், பராசக்தி படத்தை வாங்க முன்னணி ஓடிடி நிறுவனங்கள் தயக்கம் காட்டி வந்த நிலையில் படத்தின் டிஜிட்டல் உரிமையை ஜீ5 நிறுவனம் 52 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகவும், அதன் சாட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சி வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து படத்தின் ப்ரோமோஷன் வேலையில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

படத்தின் கதை இதுதான்: இந்நிலையில், பராசக்தி படத்தின் கதை குறித்த தகவல் ஒன்று இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. அதாவது, 1960 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் மெட்ராசில் நடைபெற்ற ஒரு உரிமை மறுப்பு போராட்டத்தில், கிளர்ச்சியாளர்களை ஒழிக்க ஒரு அதிகாரி மெட்ராசிற்கு வருகிறார். ஆனால், அந்த போராட்டத்தை முன் எடுத்து நடத்துவதே தனது சகோதரர் தான் என்பது தெரியவருகிறது. பிரச்சனை காரணம் சகோதர் என்று தெரிந்த பின் அந்த நாயகன் என்ன செய்தார் என்பது தான் பராசக்தி திரைப்படத்தின் கதைஅதிகாரி என கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 60ஸ் காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட படமாக உருவாக்கப்பட்டுள்ளதால், கார், உடை, செட் என அனைத்தும் அதற்கு தகுந்தபடி தத்ரூபமாக படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X