‘சூர்யா 45‘ கதை இதுவா? தரமான சம்பவத்துக்கு ரெடியான ஆர்.ஜே.பாலாஜி!
சென்னை: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் "சூர்யா 45". இப்படத்தில் திரிஷா, ஸ்வாசிகா, சிவாடா, யோகி பாபு என நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த போதும், படம் குறித்த எந்தவிதமான தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது, படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில கசிந்துள்ளது.
நடிகர் சூர்யா நடித்த கங்குவா படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு வெளியானது. பல கோடி ரூபாய் பட்ஜெட்டில், சூர்யாவின் கடுமையான உழைப்பால் உருவான இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் இருந்து வந்த மோசமான விமர்சனத்தால், படம் படுதோல்வி அடைந்தது. கங்குவா படத்தை தொடர்ந்து, ரெட்ரோ திரைப்படம் வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஸ்வாசிகா என பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் சூர்யா அதிரடி காட்சிகளில் நடித்திருந்தார். இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

சூர்யா 45: இந்த திரைப்படத்தை தொடர்ந்து, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45வது திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 45 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மௌனம் பேசியதே, ஆறு படத்திற்கு பிறகு த்ரிஷா இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, ஷிவிதா, யோகி பாபு, நட்டி சுப்பிரமணியம், மலையாள நடிகை இந்திரன்ஸ், மன்சூர் அலிகான் உட்பட பலர் நடிக்கிறார்கள். சூர்யாவுக்கு வில்லனாக ஆர்.ஜே பாலாஜி நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இதுகுறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாக வில்லை.
பிறந்த நாளில் அப்டேட்: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு பேட்டைக்காரன், வேட்டை கருப்பு என பெயர் வைக்க இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்தன. ஆனால், படத்திற்கு 'கருப்பு' என பெயர் வைத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு ஆர்.ஜே.பாலாஜியின் பிறந்த நாளான ஜூன் 20ந் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல ஜூலை 23ந் தேதி சூர்யாவின் பிறந்த நாளில் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
படத்தின் கதை இதுவா: இந்நிலையில், சூர்யா 45 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படத்தின் மற்ற வேலைகள் நடந்து வரும் நிலையில் படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. இத்திரைப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டது. அதாவது, சாமியாகவும் மனிதனாகவும் வருவார் என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது கடவுள் வழக்கறிஞர் அவதாரம் எடுத்து தர்மத்தை நிலை நாட்டுவது போன்ற கதை என்பது தெரியவந்துள்ளது. ஜெய்பீம் திரைப்படத்தில் சூர்யா வழக்கறிஞர் சந்துருவாக நடித்து இருந்தார். அந்த படம் தியேட்டரில் வெளியாக வில்லை என்றாலும், ஓடிடியில் வெளியாகி பெரும் பாராட்டை பெற்றது. அந்த திரைப்படத்தை போல, இந்த திரைப்படமும், அவருடைய கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என நம்பப்படுகிறது. படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், தனது எக்ஸ் தளபக்கத்தில் இப்படம் தரமான ஆக்ஷன் படமாக விறுவிறுப்பான ஒரு படமாக இருக்கும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











