சூர்யா 42 படத்தின் தலைப்பு இதுதானா.. ஒர்க்அவுட் ஆகுமா ‘வி’ சென்டிமெண்ட்!

சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 42 படத்திற்கு 'வி'என்ற எழுத்தில் தலைப்பு வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிறுத்தை, வீரம், விஸ்வாசம், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 42 என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில், பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சூர்யா 42

சூர்யா 42

ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் என்ற வெற்றிப்படங்களை கொடுத்த சூர்யா, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கிளைமாக்ஸ் காட்சியில் 5 நிமிஷம் மட்டுமே வந்த ரோலக்சை அவரது ரசிகர்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாடினார்கள்.

அடுத்த கட்ட படப்பிடிப்பு

அடுத்த கட்ட படப்பிடிப்பு

தற்போது சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், அடுத்த கட்டபடப்பிடிப்பை விரைவில் தொடங்கி, படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

‘வி‘ செண்டிமென்ட்

‘வி‘ செண்டிமென்ட்

இந்நிலையில், சூர்யா 42 படத்திற்கு வீரம், விஸ்வாசத்தைப் போல செண்டிமென்டான 'வி' என்ற தொடங்கும் எழுத்தில் தலைப்பு வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டார், பெருமனத்தார் என ஐந்து கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்க இருப்பதால் இப்படத்திற்கு 'வீர்' என டைட்டில் வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மிருணால் தாகூர்

மிருணால் தாகூர்

மேலும், சூர்யா 42 படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சிகளில், துல்கர் சல்மான் நடித்த சீதா ராமம் படத்தில் நடித்த நடிகை மிருணால் தாகூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சூர்யா 42 படத்தில், சூர்யாவிற்கு ஜோடியாக திஷா பதானி நடித்துள்ள நிலையில், மிருணால் தாகூர் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

நானி படத்திலும்

நானி படத்திலும்

தெலுங்கு இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவான சீதா ராமம் படத்தில், மிருணால் தாகூர் அட்டகாசமாக நடித்திருந்தார். காதல் கதை அம்சத்தைக் கொண்ட இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் சக்சைப்போடு போட்டது. சீதா ராமம் திரைப்படம் மூலம் மக்களிடையே பெரிதளவில் பிரபலமான மிருணால் தாகூர், நானியின் 30வது படத்திலும் கமிட்டாகி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X