For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மற்றதை விடுங்க...வாரிசு படத்தில் பிரவு – குஷ்பு சேர்ந்து நடிக்கிறாங்க...இதை கவனிச்சீங்களா?

  |

  சென்னை : விக்ரம் பட வசூல் கொண்டாட்டம், வாரிசு அப்டேட், ஜெயிலர் அப்டேட் போன்றவற்றை தான் இன்று ரசிகர்கள் அதிகம் பேசி வருகிறார்கள். இதில் விஜய் நடிக்கும் வாரிசு படம் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

  டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 66வது படத்தின் 3 போஸ்டர்கள் மற்றும் டைட்டிலை விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இவற்றை கொண்டாடிய ரசிகர்களை விட, ட்ரோல் செய்தவர்கள் தான் அதிகம்.

  ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கபாலி பட காப்பி, ஓட்டோ விளம்பர காப்பி, கண் ஆஸ்பத்திரி பேக்கிரவுண்ட், செகண்ட் லுக் சந்திரமுகி காப்பி என பலரும் பல விஷயங்களை கூறினர். அதுமட்டுமில்லாமல் டைட்டில், ஃபர்ஸ்ட்லுக்கை வைத்து படத்தின் கதையை சொல்லி, இது பிரெஞ்ச் மொழி படத்தின் காப்பி என்று கூட சொன்னார்கள்.

  நயன்தாரா படமெல்லாம் வேணாம்.. பொன்னியின் செல்வன் என்னாச்சு.. மணிரத்னம் மனைவியை நச்சரித்த ரசிகர்கள்! நயன்தாரா படமெல்லாம் வேணாம்.. பொன்னியின் செல்வன் என்னாச்சு.. மணிரத்னம் மனைவியை நச்சரித்த ரசிகர்கள்!

  இப்படியா ட்ரோல் செய்வது

  இப்படியா ட்ரோல் செய்வது

  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் அமர்ந்திருக்கும் போட்டோவை கார் மீது அவர் அமர்ந்திருப்பது, அதே போசில் துல்கர் சல்மான் அமர்ந்திருப்பது என போட்டோஷாப் செய்தனர். எல்லாவற்றிற்கும் மேல், அதிமுக கட்சி கொடியை பேக்கிரவுண்டில் வைத்து, எடப்பாடி பழனிச்சாமியை அதே போசில் ரீமேக் செய்து கூட போஸ்டர் வெளியிட்டனர். இந்த ட்ரோல்கள் தற்போது வரை ஓயவில்லை.

  அட இதையாரும் கவனிக்கலியே

  அட இதையாரும் கவனிக்கலியே

  வாரிசு படம் பற்றி பல தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. அடுத்த அப்டேட் எப்போது வரும் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஷுட்டிங் படங்கள் கூட கசியுமா என பார்த்து வருகிறார்கள். ஆனால் வெளி வராத விஷயங்களை ஆர்வமாக கவனிப்பவர்கள், ஏற்கனவே வெளியான ஒரு முக்கியமான விஷயத்தை கனிக்க தவறிட்டாங்க. அது தான், வாரிசு படத்தில் பிரபு - குஷ்பு மீண்டும் சேர்ந்து நடிப்பது. இதை கேட்டதும் 90 ஸ் கிட்ஸ் செம குஷியாகி உள்ளனர்.

  எவர்க்ளீன் ஆன்ஸ்கிரீன் பேர்

  எவர்க்ளீன் ஆன்ஸ்கிரீன் பேர்

  1990 களில் தமிழ் சினிமாவில் பிரபலமான ஜோடி என்றால் அது பிரபு - குஷ்பு தான். டாப் 10 எவர்க்ரீன் ஆன்ஸ்க்ரீன் பேர் பட்டியலில் பிரபு - குஷ்பு நிச்சயம் இருப்பார்கள். அந்த அளவிற்கு 1990 களில் தமிழ் சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் பட ஜோடி இது. பலரின் ஃபேவரைட் ஆன்ஸ்க்ரீன் ஜோடியும் இவங்க தான்.

  கடைசியா எப்போ சேர்ந்து நடிச்சாங்க

  கடைசியா எப்போ சேர்ந்து நடிச்சாங்க

  தர்மத்தின் தலைவன் படத்தில் துவங்கி சின்னதம்பி, பாண்டித்துரை, கிழக்குக்கரை என கிட்டதட்ட 10 படங்களில் பிரபு - குஷ்பு இணைந்து நடித்துள்ளனர். கடைசியாக 1995 ம் ஆண்டு வெளிவந்த சின்ன வாத்தியார் என்ற படத்தில் தான் இந்த ஜோடி சேர்ந்து நடித்தது. அதற்கு பிறகு இவர்கள் எந்த படத்திலும் சேர்ந்து நடிக்கவில்லை,. ஆனால் தற்போது வரை பல படங்களில் இவர்கள் இருவருமே பிஸியாக தான் நடித்து வருகிறார்கள்.

  பிரபு-குஷ்பு காதல் கிசுகிசுக்கள்

  பிரபு-குஷ்பு காதல் கிசுகிசுக்கள்

  பீக்கில் இருந்த சமயத்தில் அதிகமான காதல் கிசுகிசுக்களிலும் இவர்களின் பெயர் அடிபட்டது. இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஜோடி சேர போகிறார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்று கூட பெரிய அளவில் வதந்திகள் பரவின. ஆனால் டைரக்டர் சுந்தர்.சி.,யை காதலித்து, அவரை திருமணம் செய்து கொண்டு, இரண்டு பெண் குழந்தைகளுக்கு அம்மாவாக, குடும்ப தலைவியாக, நடிகையாக, தயாரிப்பாளராக, நிகழ்ச்சி தொகுப்பாளராக, நடுவராக பல ரோல்களில் அசத்தி வருகிறார் குஷ்பு.

  வாரிசு படத்தில் பிரபு - குஷ்பு

  வாரிசு படத்தில் பிரபு - குஷ்பு

  சமீபத்தில் குஷ்பு, தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட போது தான் சிவாஜி வீட்டிற்கு சென்று பிரபு குடும்பத்தை சந்தித்து ஆதரவு கேட்டார். இந்த போட்டோக்கள் கூட செம டிரெண்டானது. இந்நிலையில் விஜய்யின் வாரிசு படத்தில் பிரபு நடிப்பதை படக்குழு ஏற்கனவே உறுதி செய்து விட்டது. சமீபத்தில் லீக்கான வாரிசு பட ஷுட்டிங் ஸ்டில்களில் குஷ்பு இருந்ததால் இந்த படத்தில் அவரும் நடிப்பது உறுதியாகி உள்ளது. அதோடு விஜய் பிறந்தநாளன்று, வாரிசு ஷுட்டிங்கின் போது விஜய் - குஷ்பு இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோ வெளியாகி இதை உறுதியாக்கி விட்டது.

  என்ன ரோலில் நடிக்கிறாங்க

  என்ன ரோலில் நடிக்கிறாங்க

  இதனால் கிட்டதட்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு பிரபு - குஷ்பு இருவரும் இணைந்து ஒரே படத்தில் நடிக்க போகிறார்கள் என்பது உறுதியாகி விட்டது. இந்த தகவலால் தற்போது இவர்கள் இருவரும் படத்தில் என்ன ரோலில் நடிக்கிறார்கள், மீண்டும் ஜோடியாக நடிக்கிறார்களா னெ அனைவரும் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.

  English summary
  Varisu team already confirmed that Prabhu play a vital role in this movie. In recent pics confirmed Kushboo also teamed up in Varisu movie team. So after 27 years, tamil cinema's evergreen on screen Prabhu - Kushboo pair to reunite in Vijay's Varisu. Now 90s kids are so happy to see this pair again in big screens.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X