twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விக்ரம் என டைட்டில் வைக்க இது தான் காரணமா... இத்தனை நாளாய் இது தெரியாம போச்சே

    |

    சென்னை : கமல் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கிறார். அதுவும் அவரின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் என்றதும் படத்திற்கு மாஸாக டைட்டில் வைப்பார் என அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவரோ, 36 வருடங்களுக்கு முன் கமல் நடித்த படத்தின் டைட்டிலை எடுத்து தனது படத்திற்கும் விக்ரம் என வைத்து விட்டார்.

    Recommended Video

    சஸ்பென்ஸை உடைத்த கமல் | Vikram | Kamal Hassan #PressMeet

    இதனால் 1986 ல் கமல் நடித்து வெளிவந்த விக்ரம் படத்தின் இரண்டாம் பாகத்தை தான் லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்குகிறார் என சொல்லப்பட்டது. தற்போது வரை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளது விக்ரம் பார்ட் 2 என்று தான் பலரும் கூறி வருகிறார்கள். ஒரே டைட்டில் வைக்கப்பட்டதால் பழைய விக்ரம் படத்தை ரீமேட் செய்திருக்கிறாரா என்று கூட சிலர் கேட்டனர். ஆனால் தற்போது எடுக்கப்பட்டுள்ள விக்ரம் படம் முற்றிலும் வேறு கதைக்களம் கொண்டது என கமல் உள்ளிட்ட பலரும் கூறியும் யாரும் அதை ஏற்பதாக இல்லை.

    4 மொழிகளில் வெளியாகும் நயன்தாரா படம்.. அழகான முதல் பாடல் வெளியானது! 4 மொழிகளில் வெளியாகும் நயன்தாரா படம்.. அழகான முதல் பாடல் வெளியானது!

    தற்போது இயக்கப்பட்டுள்ளது விக்ரம் 2 என பலரும் நினைப்பதற்கு காரணம் டைட்டில் ஒன்றாக இருப்பதாலா அல்லது இரண்டிலும் கமல் நடத்திருப்பதாலா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இரண்டு விக்ரம் படங்களிலும் அப்படி என்ன உள்ளது. எதற்காக லோகேஷ் கனகராஜ் தனது படத்திற்கு விக்ரம் என டை்டடில் வைத்தார் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.

    1986 விக்ரம் பட கதை

    1986 விக்ரம் பட கதை

    1986 ம் ஆண்டு கமல் நடித்த விக்ரம் படத்தை பற்றிய விபரங்களை இப்போது கேட்டால் ஆச்சரியப்படாமல் நிச்சயம் இருக்க முடியாது. உளவுத்துறை அதிகாரியான விக்ரம் தனது மனைவியை இழந்து, தனியாக இருக்கிறார். அவரிடம் காணாமல் போகும் ராக்கெட் ஒன்றை கண்டுபிடிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. இந்தியாவின் நட்பு நாடாக இருக்கும் சலாமியா நாட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ள அந்த ராக்கெட்டை விக்ரம் கண்டுபிடிப்பது தான் 1986 ல் ரிலீசான பழைய விக்ரம் படத்தின் கதை. இது விக்ரம் என்ற பெயரில் வெளிவந்த ஒரு நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம்.

    ஓ...இதெல்லாம் நடந்ததா

    ஓ...இதெல்லாம் நடந்ததா

    இந்த கதை பிரபல வார இதழ் ஒன்றில் தொடர் கதையாகவும் வந்தது. ஆனால் அதில் முடிவு என்ன என்பதை சொல்லாமல், மீதி கதை விரைவில் வெள்ளித்திரையில் காணலாம் என சொல்லி முடித்தார்கள். இந்த படத்தை முதலில் மணிரத்னம் இயக்குவதாக இருந்து, பிறகு மறுத்ததால் ராஜசேகர் என்பவர் இயக்கினார். சுஜாதா தயாரித்தார். ராஜபார்வை படத்திற்கு பிறகு ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்த இரண்டாவது படம் இது. இந்த கதையை படமாக எடுக்கலாம் என கமல் முதலில் சுஜாதாவிடம் கூறிய போது, ராக்கெட், கம்ப்யூட்டர் பற்றி மக்கள் பெரியதாக அறியாத காலம் இது. அதனால் இன்னும் 10 ஆண்டுகள் கழித்து இந்த படத்தை இயக்கினால் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என கூறி உள்ளார்.

    முதல் பான் இந்தியா படம்

    முதல் பான் இந்தியா படம்

    தற்போது பான் இந்தியா படம், மெகா பட்ஜெட் படம் என்கிறார்கள். ஆனால் தமிழில் எடுக்கப்பட்ட முதல் பான் இந்திய படமும், மெகா பட்ஜெட் படமும் விக்ரம் தான் என்றால் மறுக்க முடியாது. ரூ.1 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் படம் விக்ரம் தான். இந்த படம் 12 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இந்த படத்தில் பேசப்பட்ட சலாமியா மொழி, கமலால் உருவாக்கப்பட்டது. சலாமியா நாடு என சொல்லப்படும் காட்சிகள் ராஜஸ்தானில் எடுக்கப்பட்டது.

    கமல், கமல் தான்

    கமல், கமல் தான்

    விக்ரம் படம் ரிலீசான சமயத்தில் முதலில் இந்த படம் ஒன்றுமே புரியவில்லை என கடும் விமர்சனங்கள் எழுந்தது. இருந்தாலும் கமல் படம் என்பதால் 100 நாட்கள் ஓடியது. ஆனாலும் செலவழித்த தொகையுடன் ஒப்பிடுகையில் இது தோல்வி படமாகவே கருதப்பட்டது. இந்த படத்தால் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. டைட்டில் சாங்கான விக்ரம் பாடலில் கமல் சொந்த குரலில் பாடி, நடனமாடி இருப்பார். சோலோவாக பிரேக் டான்ஸ் ஆடியதும் இந்த படத்தில் தான். 36 வருடங்களுக்கு முன்பே கமல் தனது படத்தில் ராக்கெட்டிற்கு பெயராக அக்னி என்ற வார்த்தையை பயன்படுத்தியது, கம்ப்யூட்டர் மற்றும் ராக்கெட் தொழில்நுட்பம் சார்ந்த வார்த்தைகளை பயன்படுத்தியதை இப்போது பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது.

    விக்ரம் டைட்டில் வைக்க காரணம்

    விக்ரம் டைட்டில் வைக்க காரணம்

    ஆனால் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள விக்ரம் படத்தில் கமல், பார்வையிழந்த போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மனைவியை இழந்த, கை குழந்தையுடன் இருக்கும் அதிகாரியாக உள்ளார். இந்த படத்திற்காக கதை ஆலோசனை நடத்திய போது கமல் நீண்ட கதை ஒன்றை சொன்னார். அதை கேட்ட லோகேஷ், விக்ரம் பட கதை போல் உள்ளது என சொன்னாராம். அப்படியானால் படத்திற்கு விக்ரம் என்றே டைட்டில் வைக்கலாம் என கமல் - லோகேஷ் இருவரும் சேர்ந்து தான் முடிவு செய்தார்களாம். கமல் பேச்சுவாக்கில் ஒரு வரியில் சொன்ன கதை பிடித்திருந்ததால் அதையே டெவலப் செய்து, தனது ஸ்டைலில் இயக்கி உள்ள படம் தான் தற்போது இயக்கி உள்ள விக்ரம் படமாம்.

    English summary
    1986 Vikram movie was based on find the missing rocket. This was the first mega budget movie in tamil. Latest Vikram movie was different story. Kamal, Lokesh Kanagaraj also confirmed this.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X