சென்னையில் பிரம்மாண்ட வீடு.. மதுரையில் 20 ஏக்கர் நிலம்.. வடிவேலுவின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?

சென்னையில் பிரம்மாண்ட வீடு.. மதுரையில் 20 ஏக்கர் நிலம்.. வடிவேலுவின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?

சென்னை: காமெடி கிங் வைகை புயல் வடிவேலு இன்று தனது 63வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் வடிவேலு.

Do you know Vaigai puyal vadivelu net worth

இணையத்தில் பல மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு அவர் தான் மூலதனம். நாம் அன்றாடம் பார்க்கும்சமூக வலைதளங்களில் வடிவேலு இல்லாமல் மீம்களை நம்மால் கடந்து விட முடியாது.

வைகை புயல் வடிவேலு: தமிழ் சினிமாவில் எத்தனையோ நகைச்சுவைக் கலைஞர்கள் இருந்தாலும், தனது தனிப் பாணியில் நகைச்சுவை விருந்து படைத்து ரசிகர்கள் மனங்களில் இடம் பிடித்தவர் வைகைபுயல் வடிவேலு. தோற்றத்தையும் உடல்மொழியையும் சிறப்பாக நகைச்சுவைக்குப் பயன்படுத்துவதில் வடிவேலுக்கு ஈடு இணை இல்லை. தலைமுடி, மீசை,கண் என அனைத்தும் அவருடைய நகைச்சுவையில் பங்களிக்கும். மீசை இல்லாமல் ஒட்டுமீசை வைத்துக்கொள்வதையும் பென்சிலால் மீசை வரைந்து கொண்டும் ரசிகர்களை சிரிக்கவைத்துள்ளார்.

பாடி லாங்குவேஜ்: நடை, உடை, பாவனை, வசன உச்சரிப்பு என அனைத்து வகையிலும் ரசிகர்களை வெடித்துச் சிரிக்க வைப்பார். உடலை நடிப்புக்குப் பயன்படுத்துவதில் எந்த நட்சத்திர நடிகருக்கும் சளைத்தவரல்ல வடிவேலு. வடிவேலுவின் முகம், அவரின் பாடி லாங்குவேஜை வைத்து எந்த மீம்ஸ் போட்டாலும் அது டாப்பு டக்கராக கச்சிதமாகி விடுகிறது. குறிப்பாக சொல்லப்போனால், நேசமணி மீம்ஸ் உலக அளவில் டிரெண்ட் அடித்து பெரிய அலப்பறை செய்தது.

Do you know Vaigai puyal vadivelu net worth

மாமன்னன்: இத்தனை நாளாக காமெடியில் நம்மை சிரிக்க வைத்த வடிவேலு, மாமன்னன் படத்தில் மாமன்னாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதிலும் மாநடிகராக உயர்ந்துவிட்டார். நடிப்பு என்று வந்துவிட்டால், நான் ஒரு புயல் என இந்த படத்தில் மீண்டும் நிரூபித்துவிட்டார் வடிவேலு. இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. தற்போது இவர் சந்திரமுகி 2 படத்தில் நடித்துள்ளார். இப்படம் 28ந் தேதி வெளியாக உள்ளது.

சொத்துமதிப்பு: இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் வடிவேலுவிற்கு சென்னையில் மட்டும் இரண்டு வீடு உள்ளது. இந்த வீட்டின் மதிப்பு மட்டும் 2 கோடி என்றும், இரண்டு ஆடி சார், பிஎம்டபிள்யூ, டொயோடோ என நான்கு சொகுசு கார்களை வைத்து இருக்கிறார். அதே போல இவருக்கு மதுரையில் ஒரு வீடும், 20 ஏக்கர் நிலமும் உள்ளதாக கூறப்படுகிறது. ஆக மொத்தம் நடிகர் வடிவேலுவின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 130 கோடி இருக்கும் என்று திரை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X