Vetrimaran Net worth: வெற்றிகளின் நாயகன் வெற்றிமாறனின் சொத்து எவ்வளவு தெரியுமா?

சென்னை: இன்று 48வது பிறந்தநாளை கொண்டாடி வரும் இயக்குநர் வெற்றிமாறனின் சொத்து மற்றும் சம்பளம் எவ்வளவு என்று பார்க்கலாம்.

நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில் இப்போது முக்கியமான இயக்குநராக இருக்கிறார் வெற்றிமாறன். சாமானிய ரசிகர்களிலிருந்து திரை விமர்சகர்கள் , அரசியல் செயற்பாட்டாளர்கள் எனப் பல தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Do you know Viduthalai director Vetrimaaran Net worth

இயக்குநர் வெற்றிமாறன்: தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று இன்று வரை பொருமைப்பட்டுக்கொள்ளும் என்பதுகளில், மகத்தான இயக்குநர்களில் ஒருவராக பாலுமகேந்திரா திகழ்ந்துக் கொண்டிருந்தார். அவர் இயக்கிய தொலைக்காட்சித் தொடர்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் தான் வெற்றிமாறன்.

தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குநர்: இவர், 2007ம்ஆண்டு நடிகர் தனுஷை வைத்து பொல்லாதவன் படத்தை இயக்கினார். இயக்குநராக அறிமுகமான முதல் படமே வணிக வெற்றியையும் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்று கோலிவுட்டில் அவருக்கு என்று ஓர் இடத்தை பெற்றுக் கொடுத்தது. இதையடுத்து, ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை பாகம் 1 என 15 ஆண்டுகளில் மொத்தம் ஆறு படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும், ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் கொண்டாடும் இயக்குநராக இருக்கிறார்.

தேசிய விருது நாயகன்: ஆடுகளம் படம் ஆறு தேசிய விருதையும், அசுரன் படத்திற்கு சிறந்த மாநில மொழிப் படத்துக்காகவும் மற்றும் சிறந்த நடிகருக்காக தனுஷுக்கும் என 2 தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது. இதேபோல், மு.சந்திரகுமாரின் நாவலான லாக்கப் நாவலை அடிப்படையாக வைத்து உருவான விசாரணை திரைப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. வெனிஸ் சரவதேச விழாவில் கௌரவிக்கப்பட்டது.

விடுதலை 2: கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் விடுதலை பாகம் 1 வெளியானது. அப்படத்தில் அப்பாவி மக்களை விசாரணை என்ற பெயரில் அடைத்து வைத்து காவல் துறை செய்யும் சித்திரவதையை தோல் உரித்துக்காட்டி இருந்தார். இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடித்திருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது.

சொத்து மதிப்பு: வெற்றிகரமாக விளங்கி வரும் இயக்குனர் வெற்றிமாறன் ஒரு படத்திற்கு ரூ. 6 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் கூறப்படுகிறது. விரைவில் வெற்றிமாறன் இயக்கவுள்ள, வாடிவாசல் படத்திற்கு ரூ.25 கோடி சம்பளமாக கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வெற்றிமாறன் படம் எடுத்தாலே அது தேசிய விருதை பெறும் என்ற பேச்சு சினிமா வட்டாரத்தில் உள்ள போதும், வெற்றி மாறன் குறைவான சம்பளத்தையே இதுவரை பெற்று உள்ளார். இதனால், இவரின் சொத்தின் மதிப்பு 20 கோடியில் இருந்து 30 கோடி வரை மட்டுமே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X