கெத்து காட்டிய அரபிக் குத்து பாடல் ... உலக அரங்கில் செய்த சாதனை என்ன தெரியுமா? அடேங்கப்பா

சென்னை: காதலர் தினத்தன்று தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் பாடல் ஒன்றை 'அரபிக் குத்து' அதன் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தங்களது யூடியூப் சேனலில் வெளியிட்டது. நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுத அனிருத் இசையமைக்க கோலமாவு கோகிலா, டாக்டர் பட புகழ் நெல்சன் அதை இயக்கியுள்ளார். இந்தப் பாடல் வெளியாவதற்கு முன்பே இந்த பாடல் எப்படி உருவானது என ஒரு மேக்கிங் வீடியோ விட அது அந்தப் பாடலுக்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் மேலும் எகிற வைத்தது.

மேக்கிங் வீடியோவில் சிவகார்த்திகேயன் அனிருத் மற்றும் நெல்சன் மூவரும் கலந்துகொண்டு பாடலை உருவாக்கும் விதம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.அரபிக் குத்து லிரிகல் வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே ட்ரெண்ட் ஆனது.

பல முன்னணி நடிகர் நடிகைகள் அந்த பாடலுக்கு நடனமாடி அதை தங்களது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டனர். சினிமா பிரபலங்கள் மட்டுமில்லாமல் பொதுமக்கள் பலர் அந்த பாடலுக்கு நடனமாடி அதை வீடியோவாக வெளியிட்டனர்.அரபிக் குத்துப்பாடல் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் அதிக கவனம் பெற்றது. உலக அளவில் சிறந்த இந்திய மொழி பாடலுக்கு என்று தனி கௌரவம் கிடைத்திருக்கிறது.

காதலர் தின ட்ரீட்

காதலர் தின ட்ரீட்

காதலர் தின ட்ரீட்டாக வெளியான அரபிக் குத்து பாடல் விஜய் ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் அனைத்து மக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. பாடல் வெளியான சில நாட்களிலேயே பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து தற்போது வரை 90 மில்லியன் பார்வைகள் பெற்றுள்ளது. இன்னும் சில நாட்களில் அது 100 மில்லியன் பார்வையாளர்களை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு

பீஸ்ட் படத்தின் கதாநாயகியான நடிகை பூஜா ஹெக்டே பத்து வருடம் கழித்து மீண்டும் தமிழுக்கு வருகிறார். 2012 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தார். பிறகு தமிழில் எந்த பட வாய்ப்பு கிடைக்காததால் ஹிந்தி தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி அதில் வெற்றி பெற்று பிறகு பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து பல வெற்றிப் படங்களை கொடுத்தார். தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகிகள் வரிசையில் முன்னதாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பீஸ்ட் படத்திற்கு பிறகு பூஜா ஹெக்டே தமிழ் திரையுலகில் ஒரு ரவுண்ட் வருவார் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

‘ Halamathi Habibi ‘ அப்டினா ?

‘ Halamathi Habibi ‘ அப்டினா ?

அரபி குத்து பாடல் வெளியானதும் அனைவரும் அதிகமாக கவனித்தது அந்த பாடலின் ஆரம்ப வரிகள் ஆன Halamathj habibi . இதற்கு என்ன அர்த்தம் அதுதான் அனைத்து ரசிகர்கள் மண்டைக்குள்ளும் ஓடிக்கொண்டிருந்தது. பலர் அதை எந்தவித ஆராய்ச்சியும் செய்யாமல் பாடல் வரிகளை மிகச் சரளமாக பாடி ரசித்தார்கள். அதை ஆராய்ந்ததில் Halamathi Habibi என்றால் ' நான் கனவு கண்டேன் அன்பே " என்று பொருள் வருகிறது.

தமிழ் பாடல் உலகளவில் 4-வது இடம்

தமிழ் பாடல் உலகளவில் 4-வது இடம்

அனிருத் இசையமைத்த அரபிக் குத்து பாடல் உலகளவில் ஒரு மிகப்பெரும் சாதனை படைத்துள்ளது. இந்தியாவிலிருந்து வேறு எந்த ஒரு பாடலும் செய்யாத புதிய சாதனை. Sportify இசை தளத்தில் டாப் 200 பாடல்களில் ஒன்றாக நுழைந்து டாப் 4 ஆம் இடத்தை பிடித்துள்ளது. பீஸ்ட் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இதை தங்களது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளது. இந்த தகவலை விஜய் ரசிகர்கள் வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்து மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X