நடிகர் முரளியின் மகனை தெரியும்.. மகள் என்ன செய்கிறார் தெரியுமா?

சென்னை: மறைந்த நடிகர் முரளியின் மகனான அதர்வா தந்தை வழியில் நடிக்க வந்துவிட்டார். அவர் படங்களில் நடிப்பதுடன், தயாரிக்கவும் செய்கிறார். நல்ல நடிப்புத் திறமை இருந்தும் இன்னும் முன்னணி நடிகர் என்கிற அந்தஸ்தை பெற முடியாமல் போராடி வருகிறார். இவரது இரண்டாவது மகன் விரைவில் சினிமாவில் அறிமுகமாக உள்ள நிலையில், முரளியின் மூத்த மகள் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வருகிறது.

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராக இருந்த அமீர்ஜான் இயக்குநராக அறிமுகமானத் திரைப்படம் தான் பூவிலங்கு. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் முரளி. இவர் கன்னட திரையுலகின் பிரபலமான தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான சித்தலிங்கையாவின் மகன் ஆவார். பிரேமா பர்வா என்ற கன்னடப் படத்தின் மூலம் சினிமாவில் தனது நடத்தை பதித்த முரளி, அப்படத்தின் தமிழ் ரீமேக்கான பூவிலங்கு படத்தில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

Do you know what actor Murali s daughter does

பூவிலங்கு: இப்படம் 1984ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில், முரளி, குயிலி, மோகன், செந்தாமரை, சார்லி, ராதாரவி ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இந்த படத்திற்கு பிறகுதான் மோகன் பூவிலங்கு மோகன் என அழைக்கப்பட்டார். இந்த படத்திற்கு முன்பே குயிலி சில படங்களில் நடித்திருந்தாலும், இந்த படம் அவருக்கு பெயர் சொல்லும் திரைப்படமாக இப்படம் அமைந்தது. இளையராஜா இசையில் இப்படத்தில் இடம்பெற்ற நான்கு பாடல்களும் மிகப்பெரிய ஹிட் பாடலாக அமைந்தன. இப்படத்தில் இடம் பெற்ற ஆத்தாடி பாவாட காத்தாட பாடல் தற்போதும் அனைவருக்கும் பிடித்த படலாக இருக்கிறது.

Do you know what actor Murali s daughter does

ஹிட் திரைப்படங்கள்: ஹீரோக்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும், அப்போது தான் நிலைக்க முடியும் என்ற நிலையை மாற்றிய நடிகர் முரளி, பகல் நிலவு, வண்ணக் கனவுகள், புதுவசந்தம், இதயம், ஒரு தலைராகம், சுந்தரா டிராவல்ஸ், காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், வெற்றிக்கொடிகட்டு உள்ளிட்ட படங்கள் அவரின் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். முரளியின் மகன் அறிமுகமான பாணா காத்தாடி படத்தில் சிறப்புத் தோற்றத்தில் முரளி நடித்திருந்த நிலையில், படம் வெளியாவதற்கு உள்ளாகவே நடிகர் முரளி உயிரிழந்தார்.

Do you know what actor Murali s daughter does

முரளியின் மகள்: முரளிக்கு மூன்று பிள்ளைகள். மூத்த மகள் காவ்யா, இரண்டாவது மகன் அதர்வா மற்றும் மூன்றுவது மகன் ஆகாஷ். இதில் அதர்வா தந்தையைப் போல நடிகராகிவிட்ட நிலையில், மூன்றாவது மகனான ஆகாஷ், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தன்னுடன் கல்லூரியில் படித்த சக மாணவி, சினேகா பிரிட்டோ என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

Do you know what actor Murali s daughter does

முரளியின் மூத்த மகள் பெயர் காவ்யா. அவர் டாக்டராக பணியாற்றி வருகிறார். சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை நிபுணராக இருந்து வருகிறார். அவருக்கு 2011ம் ஆண்டில் திருமணமானது. பிள்ளைகள், கணவருடன் அவர் வாழ்ந்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X