»   »  காதல் பற்றி பிக்பாஸ் கணேஷ் என்ன சொன்னார் தெரியுமா?

காதல் பற்றி பிக்பாஸ் கணேஷ் என்ன சொன்னார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழில் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே இருந்து இறுதிச்சுற்று வரை சென்று டைட்டிலை தவறவிட்டவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராம்.

பிக்பாஸ் வீட்டுக்குள் யாரைப் பற்றியும் யாரிடமும் குறை சொல்லாமல் உண்மையாக இருந்ததாக சமூக வலைதளங்களில் கணேஷ் வெங்கட்ராமுக்கு ஆதரவு குவிந்தது. ஆனாலும், இவரால் பிக்பாஸ் இறுதிப்போட்டியில் நான்காமிடமே பிடிக்க முடிந்தது.

Do you know what Biggboss Ganesh said about love?

100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த இவர் தற்போது மனைவியுடன் ஒன்றாக ஹோட்டலுக்குச் சென்ற புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 'தியாகம் தான் உண்மையான காதலின் தேர்வு. என்னைப் புரிந்துகொண்டு ஆதரவாக இருந்ததற்கு நன்றி பேபி... நீதான் எனது மோட்டிவேஷன்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கணேஷை அவரது மனைவி நிஷா பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போதே ஒருமுறை சந்தித்துப் பேசினார். பிக்பாஸ் ஃபைனல் நடந்தபோது நான்காம் இடம் பெற்ற கணேஷை நிஷாதான் விட்டுக்குள் சென்று அழைத்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Ganesh Venkatram who went to the finals of BiggBoss and missed the title. He has now posted a photo on a hotel with his wife on Twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil