ஹீரோயினுக்கு குளிர் காய்ச்சல் வந்தால்.. சிவாஜி முதல் அமிதாப் வரை.. ரொம்ப வொர்ஸ்ட்!
சென்னை: கோலிவுட் சினிமா தொடங்கி ஹாலிவுட் சினிமா வரை வில்லன்கள் என்றாலே பெண்களை விரட்டி விரட்டி டார்ச்சர் செய்வார்கள், கொடுமை படுத்துவாங்க, தூக்கிட்டு போய் ரேப் பண்ணுவங்க என்பதைத்தான் பல சினிமாக்களில் நாம் பார்த்து இருக்கிறோம். வில்லன் என்றாலே மோசமானவர்கள் என்று நம் மனதில் பதிந்துவிட்டதால், சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டும் இந்த ஹீரோக்கள் செய்யும் சில்மிஷங்கள் கண்ணில் படாமலே போய்விடுகிறது. அந்த வகையில் ஹீரோக்கள் படத்தில் சில்மிஷத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் பக்கத்தில் ஏதாவது புகைப்படத்தை வரைந்து பதிவிட்டு அதில் கருத்து சொல்வார்கள். ஆனால் இன்று இன்ஸ்டாகிராம், ட்விட்டர், லிங்க்ட்இன், ஸ்னாப்சாட், டெலிகிராம் என பல சமூகவலைத்தளங்கள் வந்துவிட்டதால், கன்டென்ட் கிரியேட்டர்களில் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், ஏதாவது ஒரு புகைப்படத்தையோ, வீடியோவையோ போட்டு அதை இணையத்தில் டிரெண்டாக்கி விடுகிறார்கள். அந்த வகையில், சினிமாவில் ஹீரோக்கள் செய்யும் அட்டகாசங்கள் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

படம் பேரு உத்தமன்: அதாவது, சிவாஜி கணேசன், மஞ்சுளா நடித்த உத்தமன் படத்தில், மஞ்சுளா காய்ச்சலால் அவதிப்பட்டுக்கொண்டு இருக்க, அந்த குளிர் காய்ச்சலை சிவாஜி எப்படி நிறுத்தினார் என்று நீங்களே பாருங்க என ஒரு வீடியோ போட்டுள்ளனர். அந்த வீடியோவைப்பார்த்த இணையவாசிகள். இதுக்கு பெயர் தான் கை வைத்தியமா என கிண்டல் அடித்து வருகின்றனர்.
ஹீரோயினுக்கு குளிர் காய்ச்சல் வந்தால்: அட நம்ம ஊரு சினிமா தான் இப்படினு பார்த்தா... நம்ம பாலிவுட் பாட்ஷா நடிகர் அமிதாப் பச்சனும் நடிகை ஒருவர் குளிர் காய்ச்சலால் அவதிப்பட, சட்டுபுட்டுனு சட்டையை கழட்டிவிட்டு நடிகைக்கு கை வைத்தியம் பாத்து இருக்காரு. எந்திரன் 2 பட நடிகர் அக்ஷய் குமார், பாலிவுட் நடிகை ரேகா குளிர் தாங்க முடியாமல் அவதிப்பட, மனுஷன் கொஞ்சம் கூட யோசிக்காம, அருகில் நண்பன் இருப்பதை மறந்துவிட்டு அம்மணிக்கு கைவைத்தியம் பார்த்து இருக்கிறார். ஆக இந்த நடிகர்கள் எல்லாமே அந்த காலத்துல இதே வேலையைத்தான் இருந்து இருக்காங்க போல.
சினிமாவில் வில்லன் தான் விரட்டி விரட்டி தூக்கிட்டு போய் ரேப் பண்ண ட்ரைப் பண்ணுவாங்க, கடைசியில் ஹீரோ வந்து காப்பாத்திடுவாரு. ஆனால், அந்த ஹீரோவே சான்ஸ் கிடைச்சா காய்ச்சலா இருந்தாலும் புகுந்து விளையாடுவிடுகிறார். இதில் ஹீரோயின்கள் சினிமாவில் பாதுகாப்பாக இருக்க வேண்டியாது ஹீரோக்கள் இடம் தான் போல என இணையவாசிகள் இந்த வீடியோக்களை பார்த்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











