காதல் கிசுகிசுவில் சிக்கிய ‘இதயம்’ ஹீரா… இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?

சென்னை: இதயமே இதயமே... உன் மௌனம் என்னை கொல்லுதே.. என பாட்டுப்பாடி 90ஸ் கிட்ஸ்களை தனது அழகால் ஆட்டிவைத்தவர் நடிகை ஹீரா.

சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் படித்து வந்த ஹீரா, கதிர் இயக்கத்தில் 1991ம்ஆண்டு வெளியான இதயம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

Do you know what Idhayam movie heroine Heera is doing now

ஹீரா நடித்த முதல் படமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

மனதை கொள்ளையடித்த ஹீரா: அளவான சிரிப்பு, அமைதியான முகம், காட்டன் புடவை, ஒற்றை ரோஜாவுடன் இதயம் படத்தில் அழகு பதுமையாக வலம் வந்த ஹீராவை அவ்வளவு சீக்கிரமாக 90ஸ் இளசுகளால் மறந்துவிடமுடியாது. இதயம் படத்தில் தனது காதலை சொல்லாமல் முரளிக்கு மட்டும் ஹாட் அட்டாக் வரவில்லை. ஹீராவின் அழகைப் பார்த்து பல இளைஞர்களுக்கும் ஹாட் அட்டாக் வந்தது.

முன்னணி நடிகர்களுடன்: முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட்டான ஹீரா, கமல், அஜித், சரத்குமார், கார்த்திக் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். தமிழில் இவர் கடைசியாக சுயம்வரம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பின், தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட ஹீரா, 2006ம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார்.

Do you know what Idhayam movie heroine Heera is doing now

காதல் கிசுகிசு: நடிகை ஹீரா அஜித்துடன் காதல் கோட்டை படத்தில் இணைந்து நடித்த போது இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இருவரின் காதல் விவகாரம் குறித்து அப்போது செய்திகளும் வெளிவந்தன. அதேபோல, தசரதன் படத்தில் சரத்குமாருடன் நடித்த போது இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது.

என்ன செய்கிறார் ஹீரா: இப்படி அடிக்கடி காதல் வதந்தியில் சிக்கிய நடிகை ஹீரா, தற்போது அமெரிக்காவில் இருப்பதாகவும், தொண்டு நிறுவனத்தை தொடங்கி அதில், பெண்கள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் கல்வி செலவுக்காக தன்னால் முயன்ற உதவிகளை செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.மேலும், பிஎஸ்சி சைக்காலஜி படித்திருக்கும் ஹீரா புத்தகங்களை எழுதிவருவதாக சொல்லப்படுகிறது. ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற எந்த சழூகவலைத்தளத்திலும் அவர் ஆக்டிவாக இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X