Don't Miss!
- News
மக்களே உஷார்.. டிஜிபி சைலேந்திரபாபு பெயரில் போலி எஸ்எம்எஸ் .. ஏமாற வேண்டாம் என போலீஸ் எச்சரிக்கை
- Finance
அட இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. ரூபாயின் மதிப்பு மீண்டும் ஏற்றம்.. என்ன காரணம்?
- Sports
"தனிமையில் சிக்கி தவிக்கிறேன்".. விராட் கோலியின் உருக்கமான பேச்சு.. ரசிகர்கள் சோகம் - விவரம்!
- Lifestyle
ஒயிட் சாஸ் பாஸ்தா
- Technology
ஒன்றா, இரண்டா குறிப்பிடுவதற்கு? பட்ஜெட் விலையில் அறிமுகமான Noise ColorFit Ultra ஸ்மார்ட்வாட்ச்!
- Automobiles
இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு... உச்சகட்ட எதிர்பார்ப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
கமலுக்கு 400 கோடி வசூல் கொடுத்த விக்ரம்...விக்ரமிற்காக கமல் என்ன செய்தார் ?
சென்னை : இந்திய சினிமாவின் பெருமை, அடையாளம், தமிழ் சினிமாவின் கெளரவம், உலக நாயகன், லெஜண்ட் என பலவிதங்களில் பல ஆண்டுகளாக கொண்டாடப்படும் ஒரு நடிகர் என்றால் அது கமல்ஹாசன் தான்.
60 வருடங்கள் சினிமாவுடனேயே வாழ்ந்து, பயணித்துக் கொண்டிருப்பவர். தனது படங்களுக்கு அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு மெனக்கெடல்களை அதிகம் செய்தவர் கமல் தான். அவரை பார்த்து தான் மற்ற நடிகர்களும் அதை செய்ய துவங்கினர் என்றே சொல்லலாம்.
படத்திற்கு படம் புதுமைகளை புகுத்தி, தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான அனைத்தையும் செய்து வருபவர் கமல். ஆனால் சினிமாவிற்காக இவ்வளவு செய்பவரின் படங்கள் ஹிட் ஆனாலும், பெரிய அளவில் வசூலை பார்த்ததில்லை.
25வது நாளை வெற்றிகரமாக எட்டிய கமலின் விக்ரம்.. சென்னையில் மட்டும் எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?

கமலின் முதல் பிரம்மாண்ட வசூல் படம்
கமல் கமர்ஷியல் படங்களில் நடிக்க ஆரம்பித்தால் மற்ற நடிகர்கள் ஃபீல்ட் அவுட் என்று கூட பலர் சொல்வதுண்டு. ஆனால் கமல் மாஸ் ஹிட், அதிக வசூல் படங்களை கொடுக்க முடிவில்லையே என்ற குறையை போக்கி உள்ளது விக்ரம் படம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் 400 கோடி வசூலை கடந்துள்ளது. கமலின் முதல் பிரம்மாண்ட வசூல் படம் இது என்றே சொல்லலாம்.

150 கோடிக்கு 400 கோடி தந்த விக்ரம்
ரூ.150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட விக்ரம் படம் ரிலீசான 23 நாட்களில், அதாவது நான்கு வாரங்களில் 400 கோடியை வசூல் செய்துள்ளது. நாளையுடன் விக்ரம் படம் ரிலீசாகி 25 நாட்கள் ஆகிறது. 25வது நாள் வெற்றியை கொண்டாடுவதற்கு முன்பே வசூலை வாரி வழங்கி, அனைவரையும் மிரள வைத்துள்ளது. சீனியர், சீனியர் தான் என்பதை கமல் மீண்டும் நிரூபித்து விட்டார். அதே போல் கமல், மெகா வசூல் படங்களை கொடுக்க துவங்கினால் மற்றவர்கள் ஓரமாக நின்று வேடிக்கை தான் பார்க்கணும் என்ற ரசிகர்களின் கமெண்ட்டை உண்மை ஆக்கி உள்ளார்.

இது வழக்கமான கமல் ஸ்டைல்
வழக்கமாக தான் நடிக்கும் படங்களுக்காக உடல் எடையை கூட்டுவது, குறைப்பது, சிக்ஸ் பேக் வைப்பது, மொட்டை அடிப்பது, தாடி வளர்ப்பது போன்ற பாடி டிரானஸ்ஃபர் வேலைகள் செய்வது கமலின் ஸ்பெஷல். அதே போல் தான் நடிக்கும் படங்களில் திரைக்கதை, வசனம், பாடல் எழுதுவது, பாடுவது போன்றவைகளையும் செய்வார். புதுமையான டெக்னிக்கல் ரீதியிலான விஷயங்களையும், இதுவரை யாரும் செய்யாத விஷயங்களையும் கமல் செய்வார்.

விக்ரமிற்காக என்ன செய்தார்
அதே போல் விக்ரம் படத்திலும் பத்தல பத்தல பாடலை தானே எழுதி, பாடவும் செய்துள்ளார். தமிழில் மட்டுமல்ல இந்தி, தெலுங்கிலும் கமலே தான் எழுதி, பாடி உள்ளார். இது தவிர ஸ்பெஷலாக என்னவெல்லாம் செய்திருக்கிறார் என தெரிந்தால் நிச்சயம் ஆச்சரியப்பபடாமல் இருக்க முடியாது. பெரிய சீனியர் நடிகர், லெஜெண்ட்டாக இருந்த போதிலும் விக்ரம் படத்தில் ஒரு நடிகராக மட்டும் நடிப்பதாக கதையை ஓகே சொல்லும் போதே லோகேஷ் கனகராஜிடம் கமல் சொல்லி உள்ளார். அதுபடியே செய்தும் உள்ளார். அதனால் தான் இதை கமல் என்று சொல்வதை விட லோகேஷின் படம் என பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.

மாற்றப்பட்ட கமலின் லுக்
லோகேஷும் கமலை பெரிதாக ஒன்றும் செய்ய சொல்லாமல், ஹேர்ஸ்டையிலை மட்டும் லேசாக மாற்ற சொல்லி உள்ளார். இந்த லுக், விக்ரம் படம் ரிலீசாவதற்கு முன்பே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று விட்டது. இதே லுக்குடன் தான் பிக்பாஸ் சீசன் 5 ஐ தொகுத்து வழங்கினார். ஆனால் பார்ப்பவர்களுக்கு இது பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக கமல் மாறி உள்ள புதிய லுக் என்றே தோன்றியது. தலையில் முன்புறம் மட்டும் நரை விழுந்ததை போல் காட்டப்பட்டுள்ளதும் செம ஸ்டையிலாக இருந்தது.

இதெல்லாம் கமல் செஞ்சதே கிடையாது
டைரக்டராக லோகேஷ் சொன்னதை, ஒரு நடிகராக அப்படியே செய்து விட்டு போய் உள்ளார் கமல். ஆனால் இதுவரை எந்த படத்திற்கும் செய்யாத அளவிற்கு கமல் விக்ரம் படத்திற்காக ப்ரொமோஷன் செய்துள்ளார். இப்படி உலகம் முழுவதும் சென்றோ, ப்ரஸ்மீட், டிவி ரியாலிட்டி ஷோ போன்று எதிலும் கமல் இதுவரை ப்ரொமோஷன் செய்ததே கிடையாது. ஆனால் விக்ரம் படத்திற்காக இடை விடாமல் ப்ரொமோஷன் மட்டுமே செய்துள்ளார்.