ஏப்ரலில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்.. வசூலை அள்ளப்போகும் படம் எது?

சென்னை: கடந்த வாரம் சினிமா பிரியர்களை மகிழ்விக்கும் வகையில் விக்ரம், துஷாரா விஜயன் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் வெளியானது. அதே போல சல்மான் நடித்த சிக்கந்தர், மோகன்லால் நடித்த எம்புரான் திரைப்படங்கள் வெளியானது. இதில் சல்மான் கான் நடித்த சிக்கந்தர் திரைப்படம் இரண்டு நாளில்105.89 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மோகன்லால், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் நடித்த எம்புரான் இப்படம் உலகளவில் 4 நாட்களில் ரூ. 175 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அதே போல வீரதீரசூரன் படமும் நல்ல வசூலை பெற்றுள்ளது. அந்த வகையில், ஏப்ரல் மாதம் என்னேன்ன படங்கள் வெளியாகப்போகிறது என்பதை பார்க்கலாம்.

டெஸ்ட்: எஸ். சஷிகாந்த் இயக்கத்தில், YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டெஸ்ட். இப்படத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த் ஆகியோர் நடித்துள்ளனர். கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள, இத்திரைப்படம், வரும் ஏப்ரல் 4 நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.

test Gangers movies

குட் பேட் அக்லி: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்கிற படத்தில் அஜித் குமார் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில், த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், ராகுல் தேவ், பிரசன்னா, பிரபு, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளர். இப்படம் ஏப்ரல் 10ம் தேதி அன்று தியேட்டரில் வெளியாக உள்ளது.

test Gangers movies

கேங்கர்ஸ்: சுந்தர். சி இயக்கத்தில் பொங்கல் பண்டிகைக்கு தியேட்டரில் வெளியாகி சக்கைப்போடு போட்டது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து காமெடி நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கேங்கர்ஸ் திரைப்படம் ஏப்ரல் 24 ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் பகவதி பெருமாள், ஹரீஷ் பேரடி, மைம் கோபி, முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர்.

ராஜா சாப்: இயக்குனர் மாருதியின் இயக்கத்தில் திகில் மற்றும் நகைச்சுவை திரைப்படமான இப்படத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரித்துள்ள இப்டபம் ஏப்ரல் 10ஆம் தேதி பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தில் நிதி அகர்வால், மாளவிகா மோகன், தமன் இசையமைத்துள்ளார்.

கண்ணப்பா: விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, அக்‌ஷய் குமார் நடித்த கண்ணப்பா திரைப்படம் ஏப்ரல் 25ஆம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. எந்திரன் 2.O படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அக்‌ஷய் குமார்,கண்ணப்பா படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான இப்படத்தின் VFX வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது,

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X