21 வயதில் சாதனை.. சாய் அபயங்கர் என்ன படித்து இருக்கிறார் தெரியுமா?

சென்னை: தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்து வருபவர் சாய் அபயங்கர். அண்மையில் இவரின் ஆல்பம் பாடல் வீடியோவான 'பவழ மல்லி' பாடல் வெளியாகி இணையத்தில் டிரெண்டாகி பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்து வருகிறது. இதனால் ஒட்டுமொத்த 'ஜென் ஸி' களின் பார்வையும் இவர் மீது திரும்பி இருக்கும் நிலையில் இவர் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வரும் சாய் அபயங்கர் 2022 ஆம் ஆண்டு "வலம் வரவேண்டுமே" என்ற பாடலை எழுதி இசையமைத்து வெளியிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து, தனிப்பாடலான "ஆசா கூடா"வை வெளியிட்டார். இதையடுத்து இவர் RJ பாலாஜியின் இயக்கத்தில் உருவாகி உள்ள கருப்பு படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் மே 14ந் தேதிவெளியாக உள்ளது. அதோடு மட்டுமில்லாமல், அட்லீயின் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் AA22xA6 பான் இந்திய படத்திற்கு இவரே இசையமைத்து வருகிறார். வளர்ந்து வரும் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையில் தற்போது 6 திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

Sai Abhyankkar Music director
Photo Credit:

சாய் அபயங்கர்: இந்த நிலையில், சாய் அபயங்கரின் ஐந்தாவது இசை ஆல்பமான 'பவழ மல்லி' எனப் பெயரிட்ட இந்த ஆல்பத்தில் ஷ்ருதி ஹாசனுடன் இணைந்து சாய் அபயங்கர் பாடியுள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடித்துள்ளார். இந்த ஆல்பம் பாடல் அண்மையில் வெளியாகி சக்கை போடு போட்ட நிலையில் அனைவரின் பார்வையும் சாய் அபயங்கரின் மீதே உள்ளது. 21 வயதில் இசையின் மீது இவ்வளவு ஆர்வமா என பலரும் கேட்டு வருகின்றனர்.

இசையில் விருப்பம்: அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருந்த இவர், நான் ஆறாவது படிக்கும் போதே, என் பெற்றோரிடம் படிப்பின் மீது எனக்கு விருப்பம் இல்லை என்றும், இசையின் மீது ஆர்வம் இருக்கிறது. அதற்காக ஏதாவது செய்யுங்கள் என சொல்லி, அவரின் பெற்றோரும் அவருக்கு இசை கருவிகளை வாங்கி கொடுத்துள்ளனர்.அதன்பின் தான் சாய் அபயங்கர் தானாகே அவற்றில் இசையமைக்க கற்றுள்ளார். 10வது வரை பள்ளியில் படித்த அபயங்கர் 12ஆம் வகுப்பு தேர்வை வீட்டில் இருந்தே படித்து எழுதிய இவர்.
திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT) கணினி அறிவியலில் B.Tech பயின்றதாக பேட்டி ஒன்றில் அவரே வெளிப்படையாக கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X