ஹே ராம் படத்துக்கு ஷாருக்கான் வாங்குன சம்பளம் எவ்ளோ தெரியுமா? இது கமல்ஹாசன் சொன்ன குட்டி ஸ்டோரி!
சென்னை: கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்த ஹே ராம் படம், வெளியாகி இன்றோடு 20 ஆண்டுகள் ஆகின்றன.
ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் விதத்தில், 20 ஆண்டுகளுக்கு முன்பே ஹே ராம் எனும் கல்ட் படத்தை கமல் இயக்கி, நடித்திருந்தார்.
இந்த படத்தில், கமல்ஹாசனுடன் இணைந்து முக்கிய வேடத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடித்திருந்தார். ஆனால், ஹே ராம் படத்திற்காக சம்பளமாக ஒரு ரூபாய் கூட அவர் வாங்கவில்லையாம்.

அப்பவே அப்படி
தமிழ் சினிமாவில் உலகத் தரம் வாய்ந்த பல படைப்புகளை நடிகர் கமல்ஹாசன் கொடுத்துள்ளார். 2000ம் ஆண்டு ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கமல்ஹாசன் இயக்கி நடித்த ஹே ராம் திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை குவித்தது. கோலிவுட், பாலிவுட் நடிகர்களை கொண்டு அப்பவே அப்படி ஒரு பிரம்மாண்ட படைப்பை கமல் இயக்கி இருந்தார்.

டிரெண்டிங்கில் முதலிடம்
ஹே ராம் படம் வெளியாகி இன்றோடு 20 வருடங்கள் ஆகிறது என நடிகர் கமல்ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று காலை பதிவிட்ட ட்வீட்டை தொடர்ந்து, #20YearsOfHeyRam என்ற ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது. சென்னை டிரெண்டிங்கில் தொடர்ந்து, முதலிடத்தில் இருக்கிறது.

சம்பளம் வாங்காத ஷாருக்கான்
ஹே ராம் படத்தின் கதையை கேட்ட நடிகர் ஷாருக்கான், அந்த படத்தில் நடிக்க உடனடியாக ஒப்புக் கொண்டார். ஷாருக்கான், பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி, வசுந்தர தாஸ் என நடிகர்கள் பட்டாளத்துடன் உருவான அந்த படத்தின் பட்ஜெட் கையை மீறிப் போக, நடிகர் ஷாருக்கான் ஹே ராம் படத்துக்காக ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்க வில்லையாம்.
குட்டி ஸ்டோரி
சமீபத்தில், நடிகர் ஷாருக்கான் குறித்து, வட மாநில மீடியாவுக்கு பேட்டி கொடுத்த கமல்ஹாசன், இந்த குட்டி ஸ்டோரியை கூறியுள்ளார். சம்பளம் வாங்காமல் நடித்த ஷாருக்கான் மனசு யாருக்கு வரும் என்று சொன்ன கமல், படம் வெளியானதும், தான் ஒரு கைக் கடிகாரத்தை அவருக்கு சம்பளத்துக்கு பதிலாக வழங்கினேன் எனக் கூறியுள்ளார்.

தொட்டுப் பார்த்தால் போதும்
மேலும், நடிகர் ஷாருக்கான் குறித்து பேசிய கமல், என் கூட நடிக்கக் கூட அந்த மனுஷன் ஆசைப் படலைங்க, என்னை தொட்டுப் பார்த்தா போதும்னு சொன்னாரு, அப்படிப்பட்ட ஆளுய்யா ஷாருக்கான் என புகழ்ந்து தள்ளினார். ஹே ராம் படத்தின் இந்தி வெளியீட்டு உரிமையையும் நடிகர் ஷாருக்கான் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏகப்பட்ட சர்ச்சைகள்
20 ஆண்டுகளுக்கு முன்பே, இந்து, முஸ்லிம் அரசியல், மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கதை, கோட்சேவுக்கு பதிலாக சாகேத் ராம், ஏன் காந்தியை கொல்ல துடித்தான் என பல சர்ச்சைகள் கொண்ட படத்தை தில்லாக கமல் இயக்கி வெளியிட்டார். இந்த படத்தின் ரிலீஸ் சமயத்திலும், அவருக்கு பல சிக்கல்கள் வந்தும், அத்தனை தடைகளையும் தாண்டி படத்தை ரிலீஸ் செய்தார். இன்றளவும் ஹே ராம் படம் தமிழ் சினிமாவின் தனி சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











