இரவின் நிழல் படம் பார்த்துவிட்டு சிவக்குமாரிடம் தவறாக கூறியவர்கள்... அவர் என்ன செய்தார் தெரியுமா?
சென்னை: நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் பாடலாசிரியர் என்று பன்முகங்களைக் கொண்டவர்தான்பார்த்திபன். அனைத்து துறைகளிலும் வித்தியாசமான அணுகுமுறையை கையாள்பவர்.
ரஜினி கமல் படங்களுக்கு செல்லுங்கள். அங்கே டிக்கெட் கிடைக்காத பட்சத்தில் பிளாக் டிக்கெட் வாங்காமல் வீட்டுக்கு திரும்பச் செல்லாமல் என்னுடைய படத்தை வந்து பாருங்கள். உங்களை கண்டிப்பாக மகிழ்விப்பேன் என்று தன் முதல் படத்திற்கே விளம்பரம் செய்தவர் பார்த்திபன்.
அந்த வரிசையில் அவர் தற்சமயம் இயக்கியுள்ள படம் தான் 'இரவின் நிழல்'. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது மக்களின் வரவேற்பையும் பெற்ற வண்ணம் இருக்கிறது.

இரவின் நிழல்
80 மற்றும் 90-களில் கொடிகட்டிப் பறந்த இயக்குனர்கள் கடந்த 10 ஆண்டுகளாக பெரிதாக எந்த வெற்றியும் கொடுக்காத நிலையில், தன்னுடைய கதை திரைக்கதை வசனம் திரைப்படம் மூலம் கதையே இல்லாமல் ஒரு படத்தை எடுத்து வெற்றி கண்டார். ஒத்த செருப்பு படத்தை பார்த்த இளையராஜா,"இதற்கு மேல் புதிதாக என்ன எடுக்கப் போகிறாய்?" என்று பாராட்டினாராம். அவர் சொன்ன வார்த்தைதான் இரவின் நிழல் எடுப்பதற்கான உத்வேகமாக இருந்ததாம். ஒத்த செருப்பை விடவும் வித்தியாசமான படம் ஒன்றை தன்னால் எடுக்க முடியும் என்று நிரூபிப்பதற்காக தொடங்கிய படம் தான் இரவின் நிழலாம்.

பிரெவ்யூ
இந்தப் படத்தில் கெட்ட வார்த்தை உள்ள வசனங்கள், ஆபாசம் இல்லாத அரை நிர்வாணம் உள்ளடக்கிய சில காட்சிகள் இருக்கிறது. படம் வெளியாவதற்கு முன்னர் சினிமாக்காரர்களுக்கு பிரெவ்யூ ஷோ போட்டு காண்பித்திருக்கிறார் பார்த்திபன். அதனைப் பார்த்துவிட்டு அவரிடம் நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு பிறரிடம் வேறு வகையில் சொல்லியிருக்கிறார்கள். அப்படி ஒரு நபர், நடிகர் சிவக்குமாரிடம் சென்று பார்த்திபன் அந்த படத்தின் பிரெவ்யூ ஷோவுக்கு அழைத்தால் போகாதீர்கள். படம் முழுக்க கெட்ட வார்த்தைகளும் வசனங்களும் நிறைந்திருக்கிறது என்று பயமுறுத்தி இருக்கிறார்கள்.

படம் பார்த்த சிவக்குமார்
ஆனால் படம் வெளியான பிறகு அதனை திரையரங்கில் பார்த்த சிவக்குமார் உடனே பார்த்திபனை அழைத்து தமிழ் சினிமாவில் ஏபி நாகராஜன் முதல் பல இயக்குனர்களை பார்த்து விட்டேன். ஹாலிவுட் இயக்குனர்கள் பலரைப் பற்றி படித்திருக்கிறேன். ஆனால் உன்னைப் போல ஒரு இயக்குனர் உலகத்திலேயே கிடையாது என்று சிவக்குமார் வெகுவாக பாராட்டினாராம்

சிவக்குமாரின் அட்வைஸ்
அதுமட்டுமின்றி இந்தப் படத்திற்கு பிறகு நீ செய்ய வேண்டிய காரியம் ஒன்றே ஒன்றுதான். அடுத்த ஆறு மாதங்களுக்கு எந்த பட வேலைகளிலும் உன்னை ஈடுபடுத்திக் கொள்ளாதே. ஒரு படம் தோல்வியடைந்தால் உடனே அதனை மறக்க அடுத்த படத்தின் வேலைகளை துவங்க வேண்டும். ஆனால் ஒரு படம் வெற்றியடைந்து விட்டால் அடுத்த ஆறு மாதங்களுக்கு வாழ்க்கையை ரசிக்க வேண்டும் என்று சிவகுமார் பார்த்திபனுக்கு அட்வைஸ் செய்தாராம்.


Click it and Unblock the Notifications











