அரசு ஹோட்டலை விலைக்கு கேட்ட நயன்தாராவின் கணவர்.. விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: கடந்த சில நாட்களாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் பெயர் தான் சோசியல் மீடியாவில் அடிபட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது விக்னேஷ் சிவன் அரசு ஓட்டல் ஒன்றை விலைக்கு கேட்ட செய்தி இணையத்தில் பரவிய செய்தி பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் விக்னேஷ் சிவன். அதை தொடர்ந்து தனுஷின் விஐபி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். அது மட்டுமில்லாமல் அந்த படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தார்.இதனால், அவருக்கு தனுசுடன் நட்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, தனுஷின் தயாரிப்பில், நானும் ரவுடிதான் படத்தை இயக்கினார். அந்த படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கு இடையே காதல் மலர்ந்தது.

நயன்தாரா, விக்னேஷ் சிவன்: காதலைத் தொடர்ந்து இருவரும் லிவ்விங் டூ ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த நிலையில், 2022 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, ஷாருக்கான், அனிருத், என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் இணையதளத்திற்கு நயன்தாரா விற்றிருந்தார். ஆனால், திருமண வீடியோ கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்தது.
இருவருக்கும் மோதல்: வீடியோ வெளியாகாததற்கு பல காரணங்கள் கூறப்பட்ட நிலையில், கடந்த நவம்பர் நயன்தாராவின் பிறந்த நாளன்று, திருமண வீடியோ ஆவணத்திரைப்படமாக வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகள் மூன்று நிமிடம் இடம்பெற்றதிற்காக தனுஷ் அவர்கள் 10 கோடி ரூபாய் நஷ்டஈடு பணம் கேட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இணையத்தில் இது பெரும் பேசுபொருளாகி பலரும் அவருக்கு ஆதரவாக பேசினார். சிலர் நயன்தாரா திருமண வீடியோ விற்று பணமாக்கிய போது, தனுஷ் நஷ்ட ஈடு கேட்கக்கூடாதா என்று சிலர் தனுஷூக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தனர்.
ஓட்டலை விலை கேட்ட விக்கி: இந்நிலையில் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், அரசு ஓட்டல் ஒன்றை விலைக்கு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாண்டிச்சேரிக்கு சொகுசு காரில் வந்த விக்னேஷ் சிவன், புதுச்சேரி சட்டபேரவைக்கு சென்று, புதுச்சேரி மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்து ஓட்டல் தொழில் தொடங்குவது குறித்து பேசி உள்ளார். இப்போது, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள 'சீகல்ஸ்' ஓட்டலை விலைக்கு கிடைக்குமா என கேட்டுள்ளார். விக்கியின் இந்த கேள்வியால் ஆடிப்போன அமைச்சர் லட்சுமி நாராயணன், அந்த ஓட்டல் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி சார்பில் இயங்கி வருகிறது அதனை வாங்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
விளாசிய இணையவாசிகள்: அதன் பிறகும், விக்னேஷ் சிவன், புதுச்சேரி கடற்கரை பகுதியில் இசை நிகழ்ச்சிகள் நடத்த ஏதாவது இடம் கிடைக்குமா? என்று கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு, அமைச்சர், கடந்த 2017-ம் ஆண்டு டெண்டர் கோரப்பட்டு ஏலத்தின் அடிப்படையில் புதுவைச்சேரி கடற்கரை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தற்போது அதில் எதுவும் செய்ய முடியாது என்று கூறினாராம். அப்போது அமைச்சர் லட்சுமி நாராயணன், ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்க்க இயலும். அதற்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்துடன், ஜி.எஸ்.டி. சேர்த்து செலுத்தினாலே போதும். நீங்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்து நிகழ்ச்சியை நடத்திக்கொள்ளலாம் என்று பதில் அளித்து இருக்கிறார். இந்த செய்தி தற்போது இணையத்தில் பேசு பொருளாகி இருக்கிறது. இந்த செய்தியைப்பார்த்த ரசிகர்கள் எல்லாத்துக்கும் காரணம் பணத்திமிர் என்று இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்


Click it and Unblock the Notifications











