Don't Miss!
- News
"தமிழகத்தில் களமிறங்கும் பிரதமர் மோடி?" எங்கு தெரியுமா! ஓபனாக பேசிய அண்ணாமலை! அதிமுக குறித்தும் பரபர
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
அருள்நிதி சின்ன பையனா இருக்கும்போதே ஒரு படத்துல வந்திருக்காரு தெரியுமா..?
சென்னை: கலைஞர் கருணாநிதி அவர்கள் மட்டுமின்றி அவரது வாரிசுகள் பலரும் அரசியல் தாண்டி திரைத்துறையிலும் கால் தடம் பதித்துள்ளனர்.
அருள்நிதி, உதயநிதி, தயாநிதி என்று அவருடைய பேரன்கள் நடிகர்களாகவும், தயாரிப்பாளர்களாகவும் இருக்கின்றனர். இவ்வளவு ஏன், ஸ்டாலின் அவர்களே ஒரு படத்தில் நடித்துள்ளார்.
ஸ்டாலின் மட்டுமின்றி, அருள்நிதியின் தந்தையான மு.க.தமிழரசு அவர்களும் திரைப்பட விநியோகஸ்தராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.
லிங்கா படத்தின் மோசமான தோல்விக்கு ரஜினி காரணமா? என்னங்க இப்படி சொல்லிட்டாரு கே.எஸ்.ரவிகுமார்

கலைஞர் கேட்ட கேள்வி
முதலில் நடிகராக வேண்டும் என்று அருள்நிதி அவரது தந்தையிடம் கூறியபோது, அவர் சம்மதிக்கவில்லையாம். பிசினஸ் செய்ய வேண்டும் என்பதே அவருடைய விருப்பமாக இருந்ததாம். ஆனால் அருள்நிதி விடாப்பிடியாக இருந்ததால் ஒரு வாரம் கழித்து சம்மதித்தாராம். அதுவும் தாத்தா கருணாநிதி அவர்களிடம் சொல்லிவிட்டுத்தான் நடிக்க வேண்டும் என்று கூறிவிட்டாராம். தனது தாத்தாவிடம் அவர் விஷயத்தை சொன்னபோது, முதலில் கேட்ட கேள்வி, நீ நடிக்க வேண்டும் என்றால் யார் உன் படத்தை தயாரிப்பது என்பதுதானாம். அவர் கேட்ட அந்தக் கேள்வியில் பல அர்த்தங்கள் ஒளிந்துள்ளதாக அருள்நிதி கூறியுள்ளார்.

வம்சம்
அப்படித்தான் வம்சம் திரைப்படத்தில் நடிக்கத் துவங்கினார் அருள்நிதி. அந்தப் படத்தை தயாரித்தது அவரது தந்தை மு.க.தமிழரசு அவர்கள்தான். பசங்க திரைப்படத்தில் குழந்தைகளையே சிறப்பாக நடிக்க வைத்த பாண்டியராஜால் தன்னையும் நடிக்க வைக்க முடியும் என்று நம்பியதால்தான் பாண்டியராஜ் இயக்கத்தில் அறிமுகமானாராம். இன்று வரை அவரிடம் கற்றுக் கொன்டதுதான் தனக்கு உதவியாக இருக்கிறது என கூறியுள்ளார்.

கலைஞரின் வாட்ச்
வம்சம் திரைப்படத்தின் பிரவ்யூ ஷோவை இரண்டு முறை பார்த்த கலைஞர், அருள்நிதிக்கு தன்னுடைய வாட்ச்சை பரிசாக கொடுத்தபோது, நன்றாக நடித்துள்ளேனா என்று அருள்நிதி கேட்க, இனி நீ நன்றாக நடிப்பதற்குத்தான் இந்த வாட்ச் என்று கலைஞர் கூறினாராம். வம்சம் திரைப்படத்திற்கு முன்னரே ஞாயத்தராசு, இதயத்தாமரை போன்ற படங்களை விநியோகித்து, கோபுர வாசலிலே படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார் மு.க.தமிழரசு அவர்கள்.

அருள்நிதிக்கு விழுந்த அடி
நடிகர் கார்த்திக் மற்றும் பானுபிரியா நடித்திருந்த கோபுர வாசலிலே திரைப்படத்தை தமிழரசு மற்றும் அவருடைய பார்ட்னர் ஒருவர்தான் சேர்ந்து தயாரித்தார்களாம். அந்தப் படத்தின் பூஜையின்போது அருள்நிதிக்கும், பார்ட்னரின் பிள்ளைக்கும் ஒரே மாதிரியான உடைகள் கொடுத்து இருவரையும் அருள்நிதியின் பாட்டி சிலைக்கு மலர்கள் தூவி படம்பிடித்து அதனை படத்தில் இணைப்பதற்கு திட்டமிட்டிருந்தார்களாம். கேமரா, லைட் வெளிச்சம், கூட்டம் அனைத்தையும் பார்த்து அருள்நிதி மட்டும் பயந்துகொண்டு மாடிக்கு ஓடிவிட்டாராம். அப்போது தமிழரசு அவர்கள் அருள்நிதியின் தலையில் ரெண்டு அடி போட்டு பூ போட வைத்தார் என அருள்நிதி கூறியுள்ளார்.